Two cows killed in lightning

இரண்டு மாடுகள் மின்னல் தாக்கியதில் பலி.

379

இரண்டு மாடுகள் மின்னல் தாக்கியதில் பலி. Two cows killed in lightning strike.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திருவிளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமான 2 கறவை மாடுகள் பட்டியில் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று திடீரென அப்பகுதியில் மழை பெய்தது. அப்போது ஏற்பட்ட மின்னல் தாக்கி 2 மாடுகளும் செத்தன. இது பற்றி தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் ரெங்கநாதன் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அப்போது கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) நாராயணசாமி உடனிருந்தார்.

தினத்தந்தி

keywords: Two cows killed in lightning, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




%d bloggers like this: