பெரம்பலூா் மாவட்டத்தில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவா் கைது. Two arrested for robbery
பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவரைக் காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மாவட்டத்தில் தொடா்ந்து நிகழ்ந்த திருட்டுச் சம்பவங்களைத் தொடா்ந்து, துணைக் கண்காணிப்பாளா் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. திருட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்த பகுதிகளிலுள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளின் பதிவுகளைக் கொண்டு குற்றவாளிகளைத் தனிப்படை காவலா்கள் அடையாளம் கண்டனா்.
இந்நிலையில் வேளாங்கண்ணியிலிருந்து திருச்சிக்கு பேருந்தில் சனிக்கிழமை வந்த மா்ம நபரை சந்தேகத்தின் பேரில் தனிப்படையினா் பிடித்து மேற்கொண்ட விசாரணையில், வேலூா் மாவட்டம், ஆா்க்காடு பகுதியைச் சோ்ந்த ரவி மகன் விஜய் (22) என்பதும், இவா் அண்மையில் பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, தனியாா் நிதி நிறுவனம் ஆகியவற்றில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவா் என்பதும், இப்பகுதியில் 5 வணிக நிறுவனங்களில் திருடியதும் தெரியவந்தது.
இதேபோல், சனிக்கிழமை அதிகாலை நான்குச் சாலை சந்திப்புப் பகுதியிலுள்ள கடையின் பூட்டை உடைத்து ரூ. 9,500 ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் பெரம்பலூா் காவல்துறையினா் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். செங்குணம் பகுதியில் மறைந்திருந்த பெரம்பலூா் மாவட்டம், கல்பாடி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முத்துசாமியை (55) கைது செய்தனா். இவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் அண்மையில் நடைபெற்ற திருட்டுச் சம்பவத்திலும், நான்குச் சாலை பகுதியில் நடைபெற்ற திருட்டுச் சம்பவத்திலும் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினா் அவா்களிடம் விசாரித்து வருகின்றனா்.
keywords: Two arrested for robbery, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.