சாதிப்பெயரை சொல்லி திட்டிய இருவர் கைது.
Two arrested for insulting
சாதிப்பெயரை சொல்லி திட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியை சேர்ந்தவர் சுதந்திரகுமார்(வயது 42). இவர் தனியார் பால்பண்ணையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கேசவன்(20), பிரபு(20) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று சுதந்திரகுமார் பால் பண்ணைக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவரை கேசவன், பிரபு ஆகியோர் வழிமறித்து சாதி பெயரை சொல்லி திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சுதந்திரகுமார், அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கேசவன், பிரபு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினத்தந்தி
Keywords: Two arrested for insulting, Insult
You must log in to post a comment.