லாரி ஓட்டுநரைத் தாக்கியவர்கள் கைது

பெரம்பலூரில் மோட்டார் சைக்கிளில் கள்; 2 பேர் கைது

396

பெரம்பலூரில் மோட்டார் சைக்கிளில் கள்; 2 பேர் கைது. Two arrested for carrying toddy

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா பகடப்பாடியை சேர்ந்த பெரியசாமி (வயது 34), ராமராஜ் (30) என்பதும், அவர்கள் பகடப்பாடியில் இருந்து பனைமரத்து கள் வாங்கி மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் மற்றும் போலீசார், பெரியசாமி மற்றும் ராமராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

தினத்தந்தி

keywords: carrying toddy, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
%d bloggers like this: