Weight Lose

உடல் எடை குறைக்க புரதம் நிறைந்த இந்த உணவுகளை சாப்பிட்டு பாருங்க..!

1198

உடல் எடை குறைக்க புரதம் நிறைந்த இந்த உணவுகளை சாப்பிட்டு பாருங்க..!

Try this to lose weight!

தற்போதைய அவசர வாழ்க்கையில் மனிதனின் அவசர உணவுப் பழக்கத்தாலும் குறைந்து உடல் உழைப்பினாலும் தேவையற்ற கொழுப்புகள் ஏறி உடல் எடை கூடிக்கொண்டே செல்கிறது. இது அசைவம் சாப்பிடுபவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை. சைவம் சாப்பிடுபவர்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. உடல் எடையைக் குறைப்பதற்கு எதை எதையோ முயற்சி செய்து பார்த்திருப்பீர்கள். அதிலும் எடை குறையாதவர்கள் இதைக் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள்.

உணவு பழக்கத்தில் மாற்றம்:

நமது உடல் எடை குறைக்க தீர்மானித்தால் முதலில் நாம் செய்யவேண்டியதில் முக்கியமான ஒன்று நமது உணவு பழக்கத்தை மாற்ற வேண்டும். மாவுச்சத்து நிறைந்த உணவுகளை குறைத்து அதற்கு பதிலாக புரதம் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இதுதான் நாம் மேற்கொள்ள போகும் முயற்சிக்கு முதல் படி. இந்த பதிவில் மற்ற விபரங்களையும் பார்ப்போம்.

சியா விதைகள்: Chia seeds

சியா விதைகளில் புரதம் நிறைந்துள்ளது. இது உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து தினமும் ஒரு கிளாஸ் நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

சோயா பீன்ஸ்: soya bean

சோயா பீன்ஸ் புரதம் நிறைந்த உணவாகும். அதிக கலோரிகள் கொண்ட உணவு பொருட்களுக்கு பதிலாக சோயா பீன்ஸை பயன்படுத்தும் பொழுது உங்களுக்கு அதிக புரதம் கிடைக்கும், எடை குறைக்கவும் உதவும்.

ஹம்முஸ்: Hamous

ஹம்முஸ் என்பது அரேபியர்கள் பயன்படுத்தும் உணவாகும். இது கொண்டைக்கடலையை வைத்து தயாரிக்கும் ஒரு உணவாகும். கொண்டைக் கடலையில் இருக்கும் அமினோ ஆசிட்டுகள் மற்றும் புரதச்சத்து சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த சுவையான உணவாக இருக்கிறது.

பாலக்கீரை: Spinach

பாலக் கீரையில் புரதம், இரும்பு சத்து, மற்றும் வைட்டமின் கே-யும் நிறைந்துள்ளது. இது எடை குறைப்புக்கு உதவுவதோடு நார்சத்தையும் வழங்கி உங்கள் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக வளருவதற்கு உதவுகிறது.

பாதாம்: Batham

பாதாம் பருப்பிலும் புரதம் நிறைந்துள்ளது. பாதாம் பருப்பை ஊறவைத்து அவ்வப்போது தின்பண்டமாக பயன்படுத்துவதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவும்.

முந்திரி: Cashew

முந்திரி பருப்பிலும் புரதம் அதிகமாக இருக்கிறது. இதை உணவில் சேர்த்து கொள்வதுடன் தின்பண்டமாகவும் பயன்படுத்தலாம். இதுவும் நமது உடல் எடையை குறைக்க உதவி புரியும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து புரதப் பொருட்களுகம் நமக்கு மிக எளிதில் கிடைக்க கூடியவைகள்தான். வாங்கி சாப்பிட்டு உடல் எடையை குறைக்க முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள் வாசகர்களே!

எமது பேஸ்புக் பக்கம்

கிச்சிலி சம்பா அரிசியின் பயன்கள்..!

கைக்குத்தல் அரிசியின் பயன்கள்..!

காட்டுயானம் அரிசியின் பயன்கள்..!

மூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்..!

கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்

மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா?

சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..!

கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள்

பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி

சீரக சம்பா அரிசியின் பயன்கள் 

Keywords: lose weight, weight lose, weight lose tips




%d bloggers like this: