ADVERTISEMENT
Traveling by bus from Dubai to Hatta

துபாயிலிருந்து ஹட்டாவுக்கு பஸ்சில் பயணம்

Traveling by bus from Dubai to Hatta

வாரம் முழுவதும் வேலை செய்துவிட்டு வார விடுமுறை நாட்கள் வருகிறது என்றாலே ஒரே கொண்டாட்டம்தான். எங்காவது சென்று வேலை சிந்தனையில்லாமல் கொஞ்சம் ஜாலியாக இருக்கவே பெரும்பாலோர் ஆசைப்படுவதுண்டு. அவர்களுக்காகவே இந்த ஏரியா.. நீங்களும் இந்த ஏரியாவுக்கு சென்று அமைதியான இடத்தில் நேரத்தை கழிக்கலாம்.

ஏன் ஹட்டாவிற்குச் செல்ல வேண்டும்?
ஹட்டா துபாயின் வெளியே உள்ள ஒரு அழகான இடம். பயணம் செய்து இயற்கையைக் கண்டு மகிழுவதற்கு இது மிகச் சிறந்த இடம்.

ஹட்டா எக்ஸ்பிரஸ் பஸ்
இப்போது துபாயிலிருந்து ஹட்டாவிற்கு பஸ்சில் பயணம் செய்யலாம். இதோ இதற்கான தகவல்கள்:

பஸ் நேரங்கள் மற்றும் வழிகள்

ADVERTISEMENT
  1. ஹட்டா எக்ஸ்பிரஸ் (Hatta Express) (ரூட் ஒன்று – H02)
    • தொடங்கும் இடம்: துபாய் மால் ஸ்டேஷன்
    • கிளம்பும் நேரம்: ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு முறை
    • நேரம்: தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை
    • பஸ் வகை: டீலக்ஸ் பேருந்துகள்
    • சென்று சேரும் இடம்: ஹட்டா பஸ் ஸ்டேஷன்
  2. ஹட்டா ஹாப் ஆன் ஹாப் ஆஃப் (இரண்டாவது வழி – H04)
    • தொடங்கி முடியும் இடம்: ஹட்டா பஸ் ஸ்டேஷன்
    • கிளம்பும் நேரம்: 30 நிமிடத்திற்கு ஒரு முறை
    • நேரம்: தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை
    • நிறுத்தம் இடங்கள்: ஹட்டா அணை, ஹட்டா ஹெரிடேஸ் வில்லேஜ், ஹட்டா வாடி ஹப், ஹட்டா ஹில் பூங்கா.

பயண நேரம்

  • துபாயிலிருந்து ஹட்டா: 1 மணி நேரம் 30 நிமிடங்கள்
  • ஹட்டாவிலிருந்து துபாய்: 1 மணி நேரம் 30 நிமிடங்கள்

கட்டணம்

  • Hatta Express (Route One): ஒரு முறை Dh25 (மொத்தமாக சென்று வருவதற்கு Dh50)
  • Hatta Hop on Hop off (Route Two): ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் Dh2

செலுத்தும் முறைகள்

  • நோல் கார்டு: போதுமான பணம் நிரப்பி வைத்து உபயோகிக்கலாம்.
  • பணம்: டிரைவரிடம் பணத்தை நேரடியாக கொடுக்கலாம்

உங்கள் ஹட்டா பயணம் மகிழ்ச்சியாக இருக்கட்டும்!

Keywords: Dubai to Hatta, Dubai Tamil News, UAE Tamil News, GCC Tamil News, Gulf Tamil News

ADVERTISEMENT

அமீரக செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.

Our Facebook Page

ALSO READ:
துபாய்: 2040க்குள் மெட்ரோ நிலையங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க திட்டம்.!
UAE: வெள்ளிக்கிழமை தொழுகை சிறப்புப் பிரசங்க நேரம் குறைப்பு
குவைத்தில் ஹலால் உணவுக்கான புதிய விதிமுறைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *