டூரிஸ்ட் விசாவில் UAE செல்வதற்கு ICA / GDRFA ஒப்புதல் தேவை இல்லை.
Gulf News: Travel to the UAE on a tourist visa does not require ICA / GDRFA approval.
ஐக்கிய அரபு அமீரகம் செல்ல புதிய டூரிஸ்ட் விசா பெற்று இந்தியாவிலிருந்து அமீரகம் பயணிக்கும் பயணிகளுக்கும், அல்லது அமீரக விமான நிலையம் வந்த பின்னர் வருகை விசா (Arrival Visa) பெறும் பயணிகளுக்கும், ICA அல்லது GDRFA விடமிருந்து பயணத்திற்கான முன் அனுமதி பெற தேவை இல்லை என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. gulf news tamil
புதிய டூரிஸ்ட் விசாவில் அமீரகம் பயணம் செய்ய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மையங்களிலிருந்து பெறப்பட்ட COVID-19 நெகடிவ் ரிசல்ட் வைத்திருப்பது கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளது. uae news tamil
சில வாரங்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே ஏற்பட்ட ஏர் பபுள் ஒப்பந்தத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு விமானங்கள் முலமாக, செல்லுபடியாகும் அனைத்து விதமான விசாக்களின் மூலமும் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்கலாம் என இந்திய சிவில் விமான போக்குவரத்துக்கு அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும் புதிய விசாக்களில் அமீரகம் பயணம் செல்ல அனுமதி உண்டா அல்லது ICA / GDRFA விடம் முன் அனுமதி ஏதேனும் பெற வேண்டுமா என்ற குழப்பம் அனைவரிடமும் நீடித்து வந்த நிலையில், தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. gcc news tamil
அபுதாபிக்கும் ஷார்ஜாவிற்கும் பயணிக்க, ICA வின் uaeentry.ica.gov.ae என்ற இணையதளத்தில் தங்களின் ஆவணங்களை சரிபார்த்து, அதில் பச்சை நிறத்தில் “Entry Allowed” என்ற மெசேஜ் வந்தால் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
keyword: gulf news tamil, uae news tamil, gcc news tamil
You must log in to post a comment.