மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க இதை ட்ரை பண்ணுங்க.

பரீட்சை எழுதப் போகும்  மாணவர்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க இதை ட்ரை பண்ணுங்க.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சத்தான உணவுகளை அளிப்பது அவசியம். எந்தெந்த உணவுகளைச் சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக செயல்படும் எனப் பார்ப்போம்.

கீரைகள்: பசளைக் கீரையில் வைட்டமின் ஏ சத்துடன், ஏராளமான இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன.பசளிக்கீரையில் உள்ள இரும்பு சத்து, நல்ல நோய் எதிர்ப்பு திறனை உடலுக்கு அளிப்பதோடு, குழந்தைகளின் மூளை செயல்பாடுக்கு பலம் அளிக்கிறது. மேலும் அதிலுள்ள கால்சியம் குழந்தைகளின் எலும்பு வலுவாக வளர்ச்சியடைய உதவுவதோடு, அதிக நேரம் படிப்பதால் கண் அயர்ச்சி ஏற்படுவதையும் குறைக்கிறது.

பால்: பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தினமும் 600 மில்லி கிராம் கால்சியம் சத்து மிகவும் அவசியமானது. அதுவும் தேர்வு நேரம் என்றால் கேட்கவே வேண்டாம்.மேலும் உடல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் கால்சியம் சத்து மிகவும் அவசியம் என்பதால் குழந்தைகளுக்கு பால் கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்று.

புரதம்: வளரும் குழந்தைகளுக்கு முட்டை, பால் பொருட்கள் அல்லது இறைச்சி ஆகியவற்றின் மூலமாகவே அல்லது இதர உணவு பொருட்கள் மூலமாகவோ புரத சத்து கொடுக்கப்படுவது மிகவும் அவசியமான ஒன்றாகும் என்பதால், தேர்வு காலத்தில் இதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.

ஆரஞ்சுப்பழம்: மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் ஏற்படும் அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தினல அவர்களது வைட்டமின் சி அளவும் மிகவும் குறைந்து போய்விடுகிறது. இந்த வைட்டமின் சி இழப்பால் ஒரு சில நோய் தாக்குதலுக்கு ஆளாகுகிறார்கள். இதனை தடுக்க ஆரஞ்சுப் பழம் கொடுப்பது மிக நல்லது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமல்லாது, உடல் வளர்ச்சிக்கு தேவையான ஃபோலிக் அமிலமும் ஏராளமாக உள்ளதால் அதனை தேர்வு நேரத்தில் அடிக்கடி சாப்பிட கொடுக்கலாம் என்கின்றனர் மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

30total visits,2visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: