டிராபிக் பைன் தள்ளுபடித் திட்டம் ரத்து: துபாய் காவல்துறை அறிவிப்பு.
Gulf News: Traffic fine discount scheme stopped: Dubai Police
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் விதிமீறல்களுக்காக வாகன ஓட்டுநர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களில் இருந்து 100 சதவீதம் வரையில் தள்ளுபடி பெறும் திட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக துபாய் காவல்துறை அறிவித்திருக்கிறது. Dubai News
இது தொடர்பாக துபாய் காவல்துறையின் போக்குவரத்து காவல் பிரிவின் தலைமை இயக்குனர் இந்த அபராத தள்ளுபடி திட்டத்தை தற்காலிக ரத்து குறித்த அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளையில், ஏற்கனவே தள்ளுபடி பெற்றவர்களுக்கு இதனால் எவ்வித பாதிப்புமில்லை. தள்ளுபடி வழங்கப்பட்ட அபராதத் தொகை அசல் தொகைக்கு மாற்றப்படாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. Gulf News
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் அடிப்படையில், மூன்று மாதங்களுக்கு எந்த விதிமீறல்களும் செய்யாத வாகன ஓட்டிகளுக்கு அபராதத்தில் 25 சதவீத தள்ளுபடியும், ஆறு மாதங்களுக்கு எந்த விதிமீறல்களும் செய்யாத வாகன ஓட்டிகளுக்கு அபராதத்தில் 50 சதவீத தள்ளுபடியும், ஒன்பது மாதங்களுக்கு எந்த விதிமீறல்களும் செய்யாத வாகன ஓட்டிகளுக்கு அபராதத்தில் 75 சதவீத தள்ளுபடியும், ஆண்டு முழுவதும் விதிமீறல்கள் செய்யாத வாகன ஓட்டிகளுக்கு அபராதத்தில் 100 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டது. UAE News
கடந்தாண்டு பிப்ரவரி தொடங்கி ஒருவருடம் வரையில் நடைபெற்ற இத்திட்டத்தினை இந்தாண்டு பிப்ரவரியில் மேலும் நீட்டிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. GCC News
Keywords: Dubai News, Gulf News, UAE News, GCC News,
You must log in to post a comment.