பாரம்பரிய அரிசி என்றால் என்ன?
What is traditional rice?
பாரம்பரிய அரிசி என்பது குறிப்பிடத்தக்க மரபணு மாற்றங்கள் இல்லாமல் பயிரிடப்பட்டு அறுவடை செய்து நுகரப்படும் அரிசி வகைகளாகும். இந்த அரிசி வகைகள் குறிப்பிட்ட உள்ளூர் தட்பவெப்பநிலைகள், மண் வகைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளுக்கு ஏற்றவாறு அவை விளையும் பகுதிகளுக்கு ஏற்றதாக அமைகின்றன. இவ்வரிசிகள் அனைத்தும் தனித்துவமான சுவைகள் மற்றும் ஊட்டச்சத்து குணங்களை சிறப்பாக கொண்டுள்ளன.
இந்த அரிசி வகைகள் பொதுவாக திறந்த-மகரந்தச் சேர்க்கை மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதாவது நமது தலையீடு இல்லாமல் இயற்கை மகரந்தச் சேர்க்கை மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. அவற்றை அறுவடை செய்து சேமித்து மீண்டும் நடவு செய்து, பாரம்பரிய அரிசிகளை பராமரித்தும் பாதுகாத்தும் வருகின்றனர்.
Traditional Rice Benefits in Tamil
நமது பாரம்பரிய அரிசி வகைகள் விவசாய பல்லுயிர் பெருக்கத்தின் இன்றியமையாத பகுதியாகும். மேலும் அவை நோய்கள், பூச்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு எதிராக மீள்தன்மையை அடைவதன் மூலம் உணவுப் பாதுகாப்பிற்கு சிறப்பான பங்களிப்பு செய்கின்றது.
கூடுதலாக, பல பாரம்பரிய அரிசி வகைகள் நிலையான விவசாய முறைகளுக்கு மிகவும் பொருத்தமானவையாக இருக்கின்றன. அவை தட்பவெப்ப சூழலுக்கு ஏற்று வளருகிறது.
இதற்கு நேர்மாறாக, நவீன கலப்பின மற்றும் மரபணு மாற்றப்பட்ட வெள்ளை அரிசி வகைகள் அவற்றின் அதிக மகசூல் மற்றும் எளிமையான உற்பத்தி முறை போன்ற குணாதிசயங்கள் காரணமாக மிகவும் பரவலாகிவிட்டன.
இந்த நவீன ரக விவசாய உற்பத்தியின் அதிவேக முன்னேற்றத்தால் பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட்டு நுகரப்படும் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் பாரம்பரிய அரிசி வகைகளை பாதுகாப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது.
தற்போது பாரம்பரிய அரிசி வகைகளின் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
பலதரப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாப்பதன் மூலம், விவசாயத்தில் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளவும், வரவிருக்கும் தலைமுறைகளுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தேவையான மரபணு வளங்களை நாம் பராமரிக்க முடியும்.
பாரம்பரிய அரிசி வகைகள்:
- மாப்பிள்ளை சம்பா (Mappillai Samba Rice)
- கருப்பு கவுனி (Karuppu Kavuni Rice)
- சிவப்பு கவுனி (Sivappu Kavuni Rice)
- சேலம் சன்னா (Selam sanna)
- பூங்காற் அரிசி (Poongar)
- கட்ட சம்பா அரிசி (Katta Samba)
- சிங்கினி கார் அரிசி (Chingini kar)
- இலுப்பைபூ சம்பா அரிசி (Iluppaipoo samba)
- காட்டுயானம் அரிசி (Kattuyanam)
- சூர குருவை அரிசி (Soorakuruvai)
- பனங்காட்டு குட வாழைஅரிசி (Panangattu Kuda Vaalai)
- கருங்குறுவை அரிசி (Karung Kuruvai)
- கருடன் சம்பா அரிசி (Karudan Samba)
- கார் அரிசி (Kaar Arisi)
- தங்க சம்பா அரிசி (Thanga Samba)
- தூய மல்லி அரிசி (Thooya Malli)
இந்த அரிசிகளனைத்தும் உரமோ பூச்சிகொள்ளி மருந்தோ இல்லாமல் தானாக வளரும் தன்மையுடயது. எதிர்ப்பு திறனுடன் வளருவதாலோ என்னவோ இதை உட்கொள்ளும் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே கிடைக்கிறது.
பாரம்பரிய அரிசியை உண்போம்.. நோயில்லா சமூகத்தை உருவாக்குவோம்.
Keywords: traditional rice, What is traditional rice?, Parambariya Arisi, Mappillai Samba, Karuppu Kavuni,