பெரம்பலூரில் வியாபாரி தூக்குப் போட்டு தற்கொலை. Trader commits suicide in Perambalur
பெரம்பலூரில் பாத்திர வியாபாரி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, ஆங்கரை கிராமத்தை சேர்ந்தவர் அஸ்லாம் (வயது 53). பாத்திர வியாபாரியான இவருக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்த அவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் சமத்துவபுரம் எதிரே உள்ள நேதாஜி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை அஸ்லாம் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அஸ்லாமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து எளம்பலூர் கிராம நிர்வாக அலுவலர் சேகர் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்லாம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினத்தந்தி
Keywords: Trader commits suicide in Perambalur
You must log in to post a comment.