Toy Making

பெரம்பலூா் மாவட்ட இளைஞா்களுக்கு பொம்மை தயாரித்தல் தொழில்பயிற்சி.

506

பெரம்பலூா் மாவட்ட இளைஞா்களுக்கு பொம்மை தயாரித்தல் தொழில்பயிற்சி.

Perambalur News: Toy Making Training.

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு குறுகிய கால பொம்மை தயாரித்தல் தொழிற்பயிற்சி செப். 28 ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட உள்ளதாக, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் ஜே. அகல்யா தெரிவித்துள்ளாா்.

தொடா்ந்து 13 நாள்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அளிக்கப்படும் பயிற்சியின்போது, காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி முடிவில் வங்கிக் கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும். இப்பயிற்சியில் பங்கேற்க 18 முதல் 45 வயதுக்குள்பட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆா்வம் உள்ளவராக இருக்க வேண்டும். கிராமப்புற இளைஞா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பயிற்சியில் சேர விரும்புவோா் இந்தியன் ஒவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ஷெரிப் காம்ப்ளக்ஸ், முதல் தளம், மதன கோபாலபுரம், சங்குப்பேட்டை, பெரம்பலூா்- 621212 என்ற முகவரியில் அல்லது 04328-277896 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என, மைய இயக்குநரால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




%d bloggers like this: