உங்க தலை முடி கொட்டுதா..? Tips for prevent hair loss in Tamil
Some tips to prevent hair loss – தலைமுடி நல்ல கருகருவென்று அடர்த்தியா இருக்க வேண்டும் என்று ஆண், பெண் என்று வயது வித்தியாசம் இல்லாமல் ஆசை படுவார்கள். சில நேரங்களில் தலையில் கெத்தா இருந்த தலைமுடி கொத்து கொத்தா நமக்கு டாட்டா சொல்லிட்டு கிளம்பும். அந்த முடிகளை நம்மிடம் இருந்து டாட்டா சொல்லாமல் இருக்க கீழுள்ள இரண்டு டிப்ஸ்களில் எதாகிலும் ஒன்றை பயன்படுத்தி பாருங்க. அப்புறம் உங்க தலை முடி கொட்டுவதற்கு குட்பை சொல்லிடலாம். beauty tips
முடி உதிர்வை தடுக்க வீட்டிலேயே எப்படி கிரீம் தயாரிப்பது என்பதை பார்க்கலாம்.
How to make cream at home to prevent hair loss.
5 டேபிள் ஸ்பூன் அளவு பாசிப் பயறு, ஒரு கையளவு கருவேப்பிலை, அரை டம்ளர் அளவு அரிசி கழுவிய தண்ணீர், ஐந்து செம்பருத்தி பூ , கால் கப் அளவு கற்றாழை சோறு.
Hair mask for prevent hair loss – மேல் கூறிய இந்த ஐந்து பொருட்களையும் எடுத்து கொள்ள வேண்டும். பாசிப் பயறை குறைந்தது 8 மணிநேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். தலை குளிப்பதற்கு முன் ஊறவைத்த பாசிப் பயறுடன் அனைத்து பொருள்களையும் சேர்த்து நன்றாக பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ள வேண்டியதுதான். முடி உதிர்வை போக்கும் ஹேர் கிரீம் ரெடி. அப்புறம் என்ன அதை தலைமுடியின் வேர் பகுதியில் நன்றாக படும் படி தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலை தேய்து குளியுங்கள். இது போல தொடர்ந்து வாரம் ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முடி உதிர்வை தடுப்பதோடு நல்ல அடர்த்தியாக முடி வளர ஆரம்பிக்கும். அப்புறம் என்ன முடி உதிர்வுக்கு டாட்டா, பைபை தான். beauty tips
keyword: Tips for prevent hair loss in Tamil, Paasippayar for hair growth in Tamil, beauty tips