குளிர்காலத்தில் தலை முடியைப் பராமரிக்க சில டிப்ஸ்

குளிர்காலத்தில் தலை முடியைப் பராமரிக்க சில டிப்ஸ்

941

குளிர்காலத்தில் தலை முடியைப் பராமரிக்க சில டிப்ஸ். tips for maintain hair.

Beauty tips: Tamil beauty Tips

குளிர்காலம் குளுமையானது மட்டும் தான் இது ஈரப்பதம் இல்லாத காலமும் கூட. சில்லென்ற காற்றால் சருமமும் கூந்தலும் ஈரப்பதமாக இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் இதற்கு மாறாக சருமமும் கூந்தலும் வறட்சியை தான் சந்திக்கும் என்பது தெரியுமா? குளிர்காலம் உண்மையில் வறட்சியான காலம். இந்த காலத்தில் சருமத்தின் வறட்சியும் கூந்தலின் வளர்ச்சியும் போக்க பராமரிப்பு செய்வது அவ்வளவு எளிதானது அல்ல. இந்த காலத்தில் முடி உதிர்வும், முடி வறட்சியும் அதிகரிக்கும். பராமரிப்புகள் கூட சீக்கிரம் பலன் தராது.

முடி உலர்ந்தபடி இருக்கும். மென்மையான கூந்தலை கொண்டவர்களுக்கே கூந்தல் வறட்சியாக இருக்கும் போது வறண்ட கூந்தலும் எண்ணெய்ப்பசை கூந்தலும் கூடுதலாகவே படுத்தி எடுக்கும். இந்த நேரத்தில் எப்படி கூந்தலை பராமரிப்பது. தெரிந்துகொள்வோம். இதற்கு எங்கும் மெனக்கெட வேண்டாம். வீட்டிலேயே தயாரிக்க செய்யலாம்.

Beauty Tips Tamiltips for maintain hair

கூந்தலுக்கு வெந்நீர்

குளிர்காலத்தில் தலை குளியல் மேற்கொள்ளும் போது குளிர்ந்த நீர் பயன்படுத்த வேண்டாம். எப்போதும் மிதமான சூட்டில் இருக்கும் வெந்நீரை தலைகுளியலுக்கு பயன்படுத்துங்கள். வெந்நீர் அதிக சூடாக இருக்க வேண்டாம். இது தலைமுடியின் துவாரங்களை மூடுவதற்கு உதவும். இதனால் வெளியிலிருந்து படியும் அழுக்குகள் கூந்தல் சருமத்தினுள் நுழைவது தடுக்கப்படும். இது தலைமுடியில் அழுக்கு தேங்குவதை தடுக்கிறது. இதனால் முடி உதிர்வு கட்டுக்குள் இருக்கும். மிதமான வெந்நீர் கொண்ட தலை குளியல் மேற்கொள்ளுங்கள்.

​அடிக்கடி தலைகுளியல் வேண்டாம்

கூந்தலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அடிக்கடி தலைகுளியல் செய்துகொள்ள கூடாது. அதிகப்படியான தலைகுளியல் கூந்தலை வேகமாக உலர செய்துவிடும். ஷாம்பு பயன்படுத்தும் போதும் கடினமானதாக இல்லாமல் மென்மையான ஷாம்பு வகைகளை பயன்படுத்த வேண்டும். அல்லது வீட்டில் தயாரித்து பயன்படுத்தும் சோள மாவு பவுடர், அரிசி மாவு பவுடர் என அத்தியாவசிய எண்ணெய் கலந்து ஷாம்புவாக பயன்படுத்தலாம்.

​ஹேர் டிரையர் வேண்டாமே

கூந்தல் மீது அக்கறை இருந்தால் குளிர்காலத்தில் எப்போதும் ஹேர் டிரையர் தவிர்க்க வேண்டும். இதை பயன்படுத்தும் போது இதிலிருந்து வரும் வெப்பம் தலைமுடியின் ஈரப்பதத்தை மொத்தமாக உறிஞ்சுகிறது. இதனால் முடி உலர்ந்து மந்தமாக ஆகிறது. அடிக்கடி இதை தொடர்ந்து பயன்படுத்துவதால் தலைமுடி வறண்டு போகும். உங்கள் தலைமுடியை உலர வைக்க விரும்பினால் செயற்கையான வெப்பம் பயன்படுத்தி உலரவிடாமல் இயற்கையாக உலர வைக்க செய்யுங்கள். மெல்லிய துணியால் நன்றாக தலையை துவட்டி, மின் விசிறியின் கீழ் அல்லது வெயில் வரும் இடத்தில் நின்று உலரவிட வேண்டும்.

தவிர்க்க முடியாமல் நீங்கள் ஹேர் டிரையரை பயன்படுத்துவதாக இருந்தால் குறைந்த வெப்பநிலையில் கூந்தலிலிருந்து அதிக தூரம் தள்ளி பயன்படுத்துங்கள்.

​கூந்தலுக்கு எண்ணெய்

பலரும் கூந்தலுக்கு எண்ணெய் பயன்படுத்துவதை விரும்புவதில்லை. எண்ணெய் பிசுக்கு படியும். அல்லது எண்ணெய் வடியும் கூந்தலாக ஆகிவிடும் என்றூ தவிர்க்கிறார்கள். ஆனால் கூந்தல் வறட்சியாகாமல் தடுக்க எண்ணெய் அவசியம்.

விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், தேங்காயெண்ணெய் மூன்றையும் சேர்த்து ( ஒரு பங்கு விளக்கெண்ணெய், இரண்டு பங்கு நல்லெண்ணெய், மூன்று பங்கு தேங்காயெண்ணெய்) நன்றாக கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.

அதிகமாக எண்ணெய் தடவ வேண்டாம். விரல்களால் தோய்த்து உச்சந்தலையை ஸ்கால்ப் பகுதியில் நன்றாக வட்ட வடிவ இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இது கூந்தலில் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் இதனால் கூந்தலில் இருக்கும் அழுக்குகள், பொடுகுகள் நீங்கும். இதுவும் வறட்சிக்கான காரணங்களில் ஒன்றுதான்.

​தலைக்கு பாதுகவசம்

உண்மைதான் விபத்திலிருந்து காக்க ஹெல்மெட் அணிவது போன்று கூந்தல் வறட்சியடையாமல் காக்க தலைக்கு தொப்பி கவசமாக இருக்கிறது. வெளியே செல்லும் போது தலைக்கு பாதுகவசமாக தொப்பி போன்று கூந்தலை கவர் செய்துவிடுங்கள். கம்பளி தொப்பியை தவிர்த்துவிடுங்கள். இது முடி உதிர்வை உண்டாக்கும். அல்லது அணிந்திருக்கும் தாவணியை கொண்டு தலையை சுற்றி மூடிகொள்ளுங்கள். இதனால் தலையின் ஈரப்பதம் இருக்கும். முடியை விரித்து விட வேண்டாம். இறுக பின்னலிட்டு அல்லது முடியை அப்படியே கட்டிவிடுங்கள்.

​எல்லா காலமுமே அழகை பராமரிக்க வேண்டிய காலம் தான். இதில் அலட்சியம் செய்யும் போது வழக்கமான பிரச்சனையை காட்டிலும் இது கூடுதல் பிரச்சனையை உண்டாக்கிவிடக்கூடும். இந்த குறிப்புகளை கடைப்பிடிப்பதன் மூலம் கூந்தல் பிரச்சனையில்லாமல் தடுக்கலாம்.

Our Facebook Page




Leave a Reply

%d
Verified by MonsterInsights