tips for long hair

நீளமான அழகிய கூந்தல் வேண்டுமா இதோ சில டிப்ஸ்

802

நீளமான அழகிய கூந்தல் வேண்டுமா இதோ சில டிப்ஸ் || tips for long hair

கூந்தலை நீளமாக வளர்ப்பதில் நிறைய பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். நீண்ட கூந்தல் இருந்தாலே அது ஒரு தனி கெத்து நினைப்பவர்கள் உண்டு. ஆனால் கூந்தல் தான் நீளமாக வளருவதில்லை. அதற்கு சில முறைகளை கையாண்டால் கூந்தல் நீளமாக வளர வாய்ப்பாக அமையும். இதோ அதற்கான எளிமுறைகளில் சில.

Tips for long hair

உச்சந்தலைக்கு மசாஜ் (tips for hair growth)

‘மசாஜ்’ இதை கேட்டதும் ஒரு சந்தோஷம் வருகிறதா? அதுவும் தலைக்கு மசாஜ் என்றால் சொல்லவேண்டாம், அப்படி ஒரு இதமாக இருக்கும். மசாஜ் செய்தால் போது நமது முடியின் வேர்கால்களும் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும். மசாஜினால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா? மசாஜினால் உங்கள் தலைப்பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகமாகும். ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகமாகிறது. இதன் காரணமாக அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்தை கொண்டு சேர்க்க உதவும். இதனால் கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

கூந்தலை டிரிம் செய்யுங்கள். (tips for hair growth)

என்ன டிரிம் செய்ய வேண்டுமா? அப்படி செய்தால் முடியின் நீளம் குறைந்துவிடுமே என்று நீங்கள் நினைப்பது எனக்கு நன்றாக தெரிகிறது. ஆனால் உங்களின் புரிதலில் சிறு தவறு உண்டு. உண்மையில் உங்கள் கூந்தல் வேகமாக வளரவேண்டும் என்று இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூந்தலை ட்ரிம் செய்வது அவசியம். இப்படி வெட்டுவதன் மூலம் பிளவு பெற்ற கூந்தலை சரிசெய்துவிடும்.

விட்டமின்கள் (hair growth)

ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் கொண்ட விட்டமின் மாத்திரைகள் மற்றும் விட்டமின் பி அதிக அளவில் இருக்கும் உணவுகள் அல்லது மாத்திரைகள் எடுத்து கொள்வது நல்லது. இது கூந்தலின் ஆரோக்கியத்திற்கு அவசியம். பயோடின் போன்ற சப்ளிமென்ட்களும் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக்கும்.

தரமான சாம்பூ (hair growth)

நல்ல ஷாம்பூ நல்ல கூந்தலை கொடுக்கும். கெட்ட சாம்பூக்கள் உங்கள் கூந்தலை கெடுக்கும். ஆகையால் தரமான நல்ல சாம்பூவை பயன்படுத்த வேண்டும். அதை விட சிறந்தது நமது முன்னோர்கள் பயன்படுத்திய முறையான சீயக்காய் தூளினை பயன்படுத்துவது சிறப்பு.

சுத்தமான நீரில் கூந்தலை அலசவும். (hair growth)

சாம்பினை கொண்டோ அல்லது சீயக்காய் பொடி கொண்டோ தலையை சுத்தம் செய்ததும் குளிர்ந்த தண்ணீரால் கூந்தலை அலசவும். இது உங்கள் கூந்தலில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும். முடிந்த வரை சூடான நீரில் தலைக்குளிப்பதை தவிர்ப்பது நல்லது.

Our Facebook Page

Keywords: tips for long hair, hair growth,




%d bloggers like this: