சுறுசுறுப்பா இருக்க சில டிப்ஸ்..!
Tips for keep your body active
குளிர்காலத்தில் இன்னும் கொஞ்ச நேரம் படுத்துத் தூங்கவேண்டும் போல இருக்கும். குளிர் காலத்தில் சுறுசுறுப்பில்லாமல் மந்தமாக இருக்கும். மந்தமாக இருக்கக்கூடிய உடம்பை சுறுசுறுப்பாக இருப்பதற்கு சில வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
- சூரிய ஒளியில் 10 நிமிடங்கள் நிற்க வேண்டும். இதனால் உடலுக்கு தேவையான ஆற்றலை எளிதில் பெற முடியும். மேலும் அந்த நாள் முழுக்க நீங்கள் உற்சாகமாக இருக்கலாம்.
- காலையில் எழுந்தவுடன் வீட்டிற்குள் இருந்தபடியே சில உடற்பயிற்சிகளை செய்து வருவது நல்லது.
- வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். வைட்டமின் டி அதிகம் உள்ள சால்மன் மீன், சூரை மற்றும் கானாங்கெளுத்தி மீன்களை சாப்பிட்டு வரலாம்.
- கார்போஹைடிரேட் அதிகமாக உள்ள உணவுகள் சாப்பிடுவதை தவிற்கவேண்டும். குறைந்த அளவு கார்போஹைடிரேட் உள்ள உணவுகளை குளிர் காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஓட்ஸ், உலர் பழங்களை எடுத்து கொள்ளலாம்.
- எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் அவ்வப்போது எழுந்து 5 நிமிடம் நடப்பதற்கு முயலுங்கள். இதுவும் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி புரியும்.
- கிரீன் டீயில் அதிக வைட்டமின்கள் இருப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். குளிர் காலத்தில் தினமும் 1-2 கப் கிரீன் டீ குடித்து வந்தால் புத்துணர்வுடன் இருக்கலாம்.
கிச்சிலி சம்பா அரிசியின் பயன்கள்..! | |
கைக்குத்தல் அரிசியின் பயன்கள்..! | |
காட்டுயானம் அரிசியின் பயன்கள்..! | |
மூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்..! | |
கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா? | |
சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..! | |
கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள் | |
பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி | |
சீரக சம்பா அரிசியின் பயன்கள் |
Keywords: Health tips in Tamil, Tamilil health tips, body active