இந்த உணவுகள் உங்கள் ஆண்மையை பாதிக்கும் தெரியுமா?
these foods can affect your masculinity.
பொதுவாக சில உணவுகள் உடனடியாக பசியை போக்குவதற்கு உதவி புரிந்தாலும் அதில் சில பிரச்சனைகள் இருக்க செய்கிறது. குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆபத்தானவை. பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்டு வருவதனால் சிறு வயதிலேயே பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகள் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது சம்பந்தமாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஆண்மை குறைவுக்கும் காரணமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. கொழுப்புச் சத்து மிக்க உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆண்களின் விந்து உற்பத்தியை பாதிப்பதாக தெரிய வந்துள்ளது.
காய்கறிகள், பழங்கள் நிறைந்த சைவ உணவு பழக்கம் உடையவர்கள் மற்றும் அசைவ உணவுகளை உண்பவர்களுக்கு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பவர்களை விட விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது கண்டறியப்பட்டதாக ஹார்வேர்டு பல்கலைக்கழகம் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.
- பதப்பட்டுத்தப்பட்ட இறைச்சி வகைககள்
- காற்று அடைக்கப்பட்டு விற்கப்படும் பானங்கள்.
- காஃபின் சேர்க்கப்பட்ட அல்லது காஃபின் அதிகம் உள்ள பானங்கள்.
- ஜங்க் உணவுகள்.
- பாலாடைக் கட்டி மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள்
- சோயா உணவு வகைகள்.
மேலே குறிப்பிட்டு இந்த உணவுகள் பானங்களை அதிக அளவில் சாப்பிடுவது மற்றும் குடிப்பதால் ஆண்களின் விந்து அணுக்களின் செயல் திறன் பாதிக்கப்படுவதாகவும், விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது. குறிப்பாக ஆய்வில் சோயா பொருட்களை அதிக அளவு பயன்படுத்துபவர்களில் 99 சதவிகிதம் பேருக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது.
இவையில்லாமல் ஆண்கள் மது மற்றும் புகை பழக்கத்தை அதிகமாக மேற்கொண்டு வந்தால், அவர்களால் அப்பாவாக முடியாது; ஆண்களின் ஆரோக்கியத்தை அடியோடு அளிப்பதோடு மட்டும் இல்லாமல், ஆண்களின் ஆண்மையையும் இந்த பழக்க வழக்கங்கள் முற்றிலுமாக அழித்து விடக்கூடியவை. ஆகையால் ஆண்களே! இந்த மது மற்றும் புகை பழக்க வழக்கத்தை கண்டிப்பாக தவிர்க்க முயலுங்கள்; முற்றிலுமாக நிறுத்துவது கூட உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது தான்.
Keywords: these foods can affect