பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள அலுவலகத்தில் பணம் திருட்டு.
Theft of money at the office in Perambalur Palakkarai area.
பெரம்பலூர்- வடக்கு மாதவி சாலையில் உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் அப்துல் பாரூக் என்ற பாரி (வயது 58). இவர் தி.மு.க. சிறுபான்மையினர் அணியின் பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளராக உள்ளார். மேலும் பாரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் பாலக்கரை பகுதியில் கட்டுமான தொழிலுக்கான அலுவலகம் வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல், அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை பாரி வந்து பார்த்தபோது அலுவலக கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அலுவலகத்தின் உள்ளே மேஜை டிராயரில் இருந்த ரூ.20 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றிருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெரம்பலூர் போலீசார், அலுவலகத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம், Theft of money
You must log in to post a comment.