Breaking the lock

சிறுகுடலில் பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கத்தில் திருட்டு

345

சிறுகுடலில் பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கத்தில் திருட்டு.

Theft at the Milk Producers Co-operative Society

பெரம்பலூா் மாவட்டம், சிறுகுடல் கிராமத்தில் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இச் சங்கத்தின் செயலா் க. ராஜேந்திரன் (50), செவ்வாய்க்கிழமை இரவு கூட்டுறவு சங்கத்தை பூட்டி விட்டு சென்றுள்ளாா்.

புதன்கிழமை காலை வழக்கம்போல் சங்கத்தை திறக்க வந்தபோது, அதன் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பின்னா், உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவை உடைத்து, அதிலிருந்த ரூ. 36,012 ரொக்கத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம், Theft at the Co-operative Society




%d bloggers like this: