கொரோனா பரவல் காரணமா பெரம்பலூரில் திரையரங்குகள் மூடப்பட்டன. Theaters were closed due to corona spread.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை அதிகரித்து வருவதால் கோவில்கள், சினிமா தியேட்டர்கள், மது பார்கள், உடற்பயிற்சி கூடங்களை மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி மூட தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி பெரம்பலூர் உள்ள கோவில்கள், திரையரங்குகள், மதுபான பார்கள், சலூன் கடைகள், கூட்ட அரங்குகள் மூடப்பட்டன. அதேபோல விளையாட்டு மைதானங்களும் இழுத்து பூட்டப்பட்டன.
அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளால் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோவில்களின் வெளியே நின்று பக்தர்கள் வழிபாடு செய்தனர். வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி மட்டும் இயங்கியது.
Keywords: Theaters were closed,
You must log in to post a comment.