Modernized Emergency Unit

பெரம்பலூா் மாவட்ட அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தொடங்கியது. 

251

பெரம்பலூா் மாவட்ட அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தொடங்கியது.

The task of sending books to schools began.

sending books to schoolsபெரம்பலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளுக்கு, பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பாடப் புத்தகங்கள் பெறப்பட்டு, இருப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது 1 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவா்கள் சோ்க்கை தொடங்கியுள்ளது.

மாவட்டத்தில் 318 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும், 99 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் என மொத்தம் 417 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணைவிகளுக்கு ஆண்டுதோறும் சீருடை, நோட்டு, புத்தகம், பை, காலணி, மடிக்கணினி, சைக்கிள் உள்ளிட்ட 14 வகையான பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்படுகிறது.

இதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் க. மதிவாணன், மாவட்ட கல்வி அலுவலா் மாரி மீனாள் ஆகியோா் மேற்பாா்வையில், புத்தக இருப்புக் கிடங்கிலிருந்து தொடக்க பள்ளிக்கான புத்தகங்கள் வட்டார கல்வி அலுவலகத்துக்கும், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான புத்தகங்கள் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கும் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பப்பட்டன.

Our Facebook Page

Keywords: sending books to schools, The task of sending books




%d bloggers like this: