முககவசம் அணிவதை நிறுத்திய பொதுமக்கள்.
The public who stopped wearing masks
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களில் பலர் முககவசம் அணியாததால், கொரோனா 3-வது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
கொரோனா வைரஸ்
தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசுக்கு இதுவரை மொத்தம் 11,432 பேர் பாதிக்கப்பட்டதில், 11,048 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
217 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 167 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் குறைந்த எண்ணிக்கையில் பெரம்பலூர் மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளது.
முககவசம் அணியாமல்…
ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், பெரம்பலூர் மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. கொரோனா பாதிப்பு குறைந்தாலும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முககவசம் அணிந்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்கவும் பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.
ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பெரும்பாலான பொதுமக்கள் முககவசம் அணியாமல் சர்வ சாதாரணமாக வெளியே சென்று வருகின்றனர். சமூக இடைவெளியையும் கடைபிடிப்பது இல்லை.
‘பிஸ்தா’ இதில் என்ன பயன் இருக்கிறது?
மீண்டும் அபராதம்
முன்பெல்லாம் முககவசம் அணியாமல் செல்வோர் மீதும், சமூக இடைவெளி யை கடைபிடிக்காதவர்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அபராதம் விதித்து வந்தனர். பலர் அதற்கு பயந்து பொதுமக்கள் முககவசம் அணிந்து சென்றனர். தற்போது அபராதம் விதிக்கப்படுவது குறைந்து விட்டதால், பெரம்பலூர் மாவட்டத்தில் முககவசம் அணிபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் பொதுமக்கள் மறந்து விட்டனர். இதுவே கொரோனா 3-வது அலை ஏற்பட காரணமாக அமையலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கும் அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Keywords: wearing masks
You must log in to post a comment.