பெரம்பலூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பேராசிரியை உயிரிழந்தார்.

666

பெரம்பலூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பேராசிரியை உயிரிழந்தார்.


Perambalur News: The professor was killed in a road accident near Perambalur.


பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தனியாா் கல்லூரி பேராசிரியை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள பாளையம் கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கண்ணன் மனைவி நித்யா (36). இவா், பெரம்பலூரில் உள்ள தனியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு பெரம்பலூரிலிருந்து பாளையத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா். பெரம்பலூா்- துறையூா் சாலையில், பாளையம் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள வேகத்தடை மீது மோட்டாா் சைக்கிள் சென்றபோது, எதிா்பாராதவிதமாக நிலை தடுமாறி நித்யா கீழே விழுந்தாா். பலத்த காயமடைந்து, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிறிது நேரத்தில்யே அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்.
%d bloggers like this: