டென்னிஸ் பயணத்தில் சதம் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்.

நூறு ஆட்டம் விளையாடுறதுக்குள்ளேயே பலருக்கு நொரை தள்ளிடுது. இந்த பெடரர் டென்னிஸ் விளையாட்டில் 100வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாங்கியுள்ளார்.

கடந்த இரண்டாம் தேதி ஆண்களுக்கான ஏடிபி சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டி துபையில் நடைபெற்றது.  இதில் ரோஜர் பெடருடன்  கிரீஸ் வீரர் ஸ்டெபானொஸ் சிட்சிபாஸ் மோதினார். இந்த இறுதி போட்டியில் 6 -4 , 6 -4 என்ற நேர் செட்களில் ஸ்டெபானொஸ் சிட்சிபாஸை வீழ்த்தினார்.
இறுதி போட்டியில் வெற்றி பெற்ற பெடரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது இவருக்கு 100வது சாம்பியன் பட்டமாகும்.  இதுவரை  சர்வதேச டென்னிஸ் அரங்கில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும். ஒலிம்பிகில் தங்கப்பதக்கதையும் பெடரர் வென்று சாதனை புரிந்துள்ளார்.
இதற்கு முன்பு அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் என்பவர் 109 முறை பட்டங்கள் வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெடரருக்கு பிரபலங்கள் பலரும்  பாராட்டுகள் தெரிவித்து வருகிறார்கள்.Leave a Reply

%d bloggers like this: