108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. The baby boy was born in the ambulance.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள கண்டமத்தான் கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து. இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜெயலட்சுமி மீண்டும் கர்ப்பமானார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று மாலை பிரசவ வலி ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் ஜெயலட்சுமியை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் வழியிலேயே அவருக்கு பிரசவ வலி அதிகமானதால் வி.களத்தூர் கைகாட்டி அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் பொன்னுசாமி வாகனத்தை நிறுத்தினார். இதையடுத்து மருத்துவ உதவியாளர் இளையராஜா பிரசவம் பார்த்தார். இதில் ஜெயலட்சுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
keywords: ambulance, The baby boy, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.