In Trichy airport youngster arrested

மங்களமேடு அருகே வாலிபரை தாக்கியவர் கைது

477

மங்களமேடு அருகே வாலிபரை தாக்கியவர் கைது.

The assailant was arrested

மங்களமேட்டை அடுத்துள்ள ரெட்டிக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 35). இவர் புதுக்காலனியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஊர் கூட்டத்தில் கலந்து கொண்டு, பின்னர் பழைய காலனியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். பால் பண்ணை அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி அவர் மீது மோதுவது போல் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், லாரி டிரைவரிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது அங்கிருந்த அதே ஊரை சேர்ந்த லோகநாதன்(52) மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திக்கை கம்புகளால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது குறித்த புகாரின்பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர். மேலும் அவருடைய நண்பர்களை தேடி வருகின்றனர்.

The-assailant-was-arrested

தினத்தந்தி

Our Facebook Page

Keywords: The assailant arrested




%d bloggers like this: