பெரம்பலூரில் லஞ்ச வழக்கில் கைதானவர் பணியிடை நீக்கம். The arrested person is suspended.
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில் வாகன பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன்(வயது 45). இவர் பெரம்பலூர் ரோஸ் நகரில் கட்டியுள்ள புதிய வீட்டிற்கு வரி விதிக்க வேண்டி நகராட்சி அலுவலகத்தை அணுகினார். அப்போது நகராட்சி இளநிலை உதவியாளர் அப்பு என்ற அப்லோசன் (48) வீட்டு வரி நிர்ணயம் செய்வதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, அவரை நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அப்லோசனை பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்லோசனை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டார்.
keywords: suspended, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்.
You must log in to post a comment.