விசிட் விசாவில் அபுதாபி வர தற்காலிகத்தடை.
Gulf News: Temporary ban on visit visa to Abu Dhabi.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமான சேவைகளானது முற்றிலும் தொடங்கப்படவில்லை என்றாலும், இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா போன்ற சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. uae news
அமீரகத்திற்கு இயக்கப்பட்டு வரும் இந்த விமான சேவையில் முதலில் இந்தியாவில் இருந்து செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்ஸ் விசா வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். பின்னர், கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்தியாவில் செல்லுபடியாகும் அனைத்து வகையான அமீரக விசாக்கள் வைத்திருப்பவர்களும் அமீரகத்திற்கு பயணிக்கலாம் என இந்திய அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டது. gulf news.
பிறகு ரெசிடென்ஸ் விசா மட்டுமல்லாது விசிட், டூரிஸ்ட் விசா போன்ற இதர விசாக்களில் அமீரகத்திற்கு பயணிகள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டது. தற்போது ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே அபுதாபிக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டு மற்ற விசிட் மற்றும் டூரிஸ்ட் விசாக்களில் வருவதற்கு தற்காலிகமாக அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தற்பொழுது அறிவிப்பு வெளியாகியுள்ளது. uae news
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இன்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அமீரக ரெசிடென்ஸ் விசாக்கள் வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே அபுதாபிக்கு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. ரெசிடென்ஸ் விசா இல்லாமல் பிற விசாக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் அபுதாபிக்குள் நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அதில் தெரிவித்துள்ளது. gulf news
இருப்பினும் இந்த புதிய நடைமுறையானது அபுதாபி விமான நிலையத்திற்கு வருபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் துபாய் மற்றும் ஷார்ஜா போன்ற விமான நிலையங்களுக்கு வருபவர்களுக்கு எவ்வித தடை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. uae news
keyword: uae news, gulf news,
You must log in to post a comment.