குன்னம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை.
Teenager commits suicide by drinking poison near Kunnam.
குன்னம் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் பிரியங்கா (வயது 19). பிளஸ்-2 படித்துள்ளார். நேற்று முன்தினம் காலை தனது தாய் ராசாத்தி திட்டியதால் மனமுடைந்த பிரியங்கா வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து யாரும் இல்லாத போது குடித்துள்ளார். இதை அறிந்த அவரது பெற்றோர் கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பிரியங்கா இறந்துவிட்டார். இதுகுறித்து பெரியசாமி கொடுத்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தினத்தந்தி
Keywords: Teenager commits suicide, விஷம் குடித்து தற்கொலை
You must log in to post a comment.