கூகுள் மேப் வசதியுடன் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கலாம்.

214

கூகுள் மேப் வசதியுடன் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கலாம். You can prevent the spread of coronavirus by Google Maps.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் எனப்படும் கொவிட்-19 (covid-19) நோய் தொற்று பரவலினால் தொடர் அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது. பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்தபடி இருக்கிறது. இறப்பு விகிதம் ஓரளவு குறைந்துள்ளது.

இருப்பினும் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு மக்கள் மீண்டும் பணிகளுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பும் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

[the_ad id=”7251″]

இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனது கூகுள்மேப் அப்பிளிக்கேஷன் மூலமாக மக்களக்கு பாதுகாப்பை வழங்கக்கூடிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வசதியின் மூலமாக மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களை அறிந்துகொள்ள முடியும். இதனால் மக்கள் கூட்டமுள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வசதியாக இருக்கும்.

ஐக்கிய இராச்சியம், ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், இந்தியா, நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா மற்றும் போன்றவற்றில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் மற்ற நாடுகளிலும் இந்தவசதி கூகுள் மேப்பில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: