சுரைக்காயின் மருத்துவ குணங்கள்!
Suraikai maruthuva payangal..!
சுரைக்காயின் மருத்துவ குணங்கள். கொடியில் விளையும் சத்து மிக்க காய்களுல் இந்த சுரக்காயும் ஒன்று. வட மாநில உணவுகளில் அதிகமாக இந்த சுரக்காய் பயன்படுத்துகிறார்கள். ஹைதரபாத் தால்ச்சாவில் இந்த சுரக்காய் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். நமது முன்னோர்களும் சுரக்காயை தங்களது உணவுகளில் அதிகமாக பயன்படுத்தியுள்ளனர். இதிலுள்ள மருத்துவ குணங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்த வெயில் காலத்தில் விலை குறைவாக கிடைக்கும் காய்கறிகளில் சுரைக்காயும் ஒன்று. இந்த சுரக்காயிலுள்ள மருத்துவ குணங்களை பார்க்கலாம்.
- சிறுநீரக கோளாறை போக்கும்.
- சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது.
- உடல் சூட்டை தனிக்கும்.
- வைட்டமின்கள் பி, சி சத்துகளை கொண்டுள்ளதால் இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
- அஜீரணக்கோளாறை சரி செய்ய சுரைக்காய் நல்ல மருந்தாகும்.
- வெயில் காலத்தில் இதை சாப்பிடுவதால் நாவறட்சியை போக்கி தாகத்தை கட்டுப்படுத்தும்.
- சுரக்காயை உட்கொள்வதன் மூலம் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் ஆகையால் இது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்து.
- கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைபகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.
- வெயில் காலத்தில் வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் சுரக்காய் உண்பதின் மூலம் விரட்டிவிடலாம்.
- பித்தத்தை போக்க நல்ல மருந்து.
- சுரைக்காய் உண்பதன் மூலம் நரம்பு மண்டலங்களுக்கு புத்துணர்வைக் கொடுக்கிறது.
- கண் எரிச்சல், கண் வலி போன்ற பிரச்சனைகளை போக்க சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய்கள்நீங்கும்.
- ரத்தம் அழுத்தம் நோய்க்கு ஒரு துண்டு சுரைக்காயுடன் நெல்லிக்காயை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இரண்டுமுறை காலையில் வெறும் வயிற்றில் பருகி வருவதன் மூலம் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் வரும்.
பப்பாளி விதையின் அற்புத பயன்கள்.
சுரக்காயை சாப்பிடுவதால் மட்டுமல்ல அதை பச்சையாகவும் பயன்படுத்தலாம்.
- சூட்டினால் உண்டாகும் தலைவலி போக்குவதற்கு சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் தேய்ப்பதன் மூலம் தலைவலி போகும்.
- சுரைக்காய் இலைகளை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் பயன்படுத்தலாம்.
Keywords: Suraikai, Suraikai maruthuva payangal
You must log in to post a comment.