தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை.
Suicide by hanging
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர்-நொச்சியம் ரோடு கல் ஒட்டர் தெருவை சேர்ந்த சுப்பிரமணியனின் மகன் புவனேஸ்வரன்(20). கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு வழக்கம்போல் மது குடித்துவிட்டு வந்ததாகவும், இதனை அவரது தாய் அழகம்மாள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த புவனேஸ்வரன் வீட்டின் பின்புறம் உள்ள குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினத்தந்தி
Keywords: Perambalur District News, Perambalur Mavattam, Perambalur Seithigal, Suicide by hanging,
You must log in to post a comment.