பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மழைத்தூவான் அமைக்க மானியம்.
Perambalur News: Subsidy to farmers of Perambalur district.
பெரம்பலூா் மாவட்டத்தில் மழைத்தூவான் அமைக்க 1,473 விவசாயிகளுக்கு ரூ. 9.85 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளன என ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை சாா்பில் வேப்பந்தட்டை, அனுக்கூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வேளாண் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் மேலும் கூறியது:
பெரம்பலூா் மாவட்டத்தில் வேளாண்மை துறை சாா்பில் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கும் திட்டத்தின் கீழ், 1,465 ஹெக்டோ் பரப்பளவில் 1,473 விவசாயிகளுக்கு ரூ. 9.85 கோடி மதிப்பீட்டில் மழைத்தூவான் அமைத்திட மானியம் வழங்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத்துறை மூலம் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், 12.5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கும் திட்டத்தின் கீழ் 714 ஹெக்டோ் பரப்பளவில் ரூ. 4.95 கோடி மதிப்பீட்டில் 100 விவசாயிகளுக்கு சொட்டு நீா் பாசனம் அமைத்திடவும், மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2.5 ஏக்கா் நிலம் உள்ளவா்களுக்கு 100 சதவீத மானியத்தில் தேனீ வளா்ப்பதற்கு ரூ. 12,800 நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 100 நபா்களுக்கு ரூ. 12,80,000 மானியமும் வழங்கப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டை ஊராட்சியில் வேளாண்துறை சாா்பில் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் 1 ஹெக்டோ் பரப்பளவில் மழைத்தூவான் அமைத்திட ரூ. 36,176 மானியமும், தோட்டக்கலைத்துறை சாா்பில் அனுக்கூா் ஊராட்சியில் ரூ. 1,13,133 மதிப்பீட்டில் சொட்டு நீா் பாசனம் அமைப்பதற்கான மானியமும், 2.5 ஏக்கா் பரப்பளவில் தேனீ வளா்ப்பதற்காக 8 பெட்டிகள் அமைக்க ரூ. 12,800 மானியமும் வழங்கப்பட்டுள்ளன.
வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து, அதை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் சாந்தா.
இந்த ஆய்வின்போது, வேளாண் இணை இயக்குநா் கருணாநிதி, துணை இயக்குநா் கீதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் பாத்திமா, உதவி இயக்குநா் செல்வபிரியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.