Stumbling parents by misguided students!

தடம் மாறும் மாணவர்கள், தடுமாறும் பெற்றோர்கள்.!

595

தடம் மாறும் மாணவர்கள், தடுமாறும் பெற்றோர்கள்.!

Stumbling parents by misguided students!

திரைப்படங்கள், நாடகங்கள், வெப்சீரியல்கள் (web series) இவை போதாதென்று சமூக ஊடகங்கள் என்று திரும்பும் திசையெல்லாம் காதல்(?) காட்சிகளே நிறைந்து கிடைக்கிறது.

இது மாணவர்களை அதிக அளவில் சீரழித்துக்கொண்டிருக்கிறது. கைகளில் இருக்கும் மொபைல்களும் மாணவர்களை நல்வழிப் படுத்துவதைக் காட்டிலும் தீயதில் கொண்டு செல்வதில்தான் குறியாக இருக்கிறது. மேலும் மோசமான நட்பு வட்டங்கள் போன்றவை மாணவ பருவத்தை ஒரு வழி செய்துகொண்டிருக்கிறது.

தாம் பெற்ற பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்? என்பதை உற்று நோக்க நேரமில்லாத பெற்றோர்கள். நல்வழிப் படுத்த தவறும் ஆசிரியர்கள் என மாணவர்களின் தவறான போக்கிற்குத் தடைக்கல் போட ஆளில்லாததால் தாங்கள் காண்பதுதான் உலகமென்று தம் இச்சையைத் தீர்த்துக்கொள்ள முனைப்புக் காட்டுகிறார்கள். இதில் சரி எது தவறு எது என்று சிறிதும் யோசிப்பதே இல்லை. இதில் மாணவர்கள் மட்டும்தான் இப்படித் தவறு செய்கின்றார்கள் என்றில்லை மாணவிகளும் அதே நிலையில் தான் இருக்கிறார்கள்.

இதனால் பெற்றவர்களுக்குப் பெருத்த அவமானம்தான் மிஞ்சுகிறது. இம்மாதிரியான சூழலில் எப்படி தமது டீன்ஏஜ் பிள்ளைகளைச் சமாளிப்பது என்று பெற்றவர்கள் தடுமாறுகிறார்கள். இதற்காக நாம் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் பெற்றோர்கள்.

இது வாலிப பருவம் இது இப்படித்தான் இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை. பொதுவாக இந்த டீன் ஏஜ் பருவ பிள்ளைகள் தனக்கு நடந்த பலவிசயங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவார்கள். அதைக் காது கொடுத்துக் கேட்கவேண்டும். பெற்றோர்களாகிய நாம் கேட்கவில்லையென்றால் யார் அவர்கள் சொல்வதைக் கேட்கிறார்களோ அவர்களின் மீதே அதிகமான நம்பிக்கையை உண்டாக்கிவிடும்.
பதின் பருவத்தில் வரும் பிரச்சனைகள், படிக்கும் இடங்களில் ஏற்படும் சண்டைகள், மனநிலை மாற்றங்கள் பற்றிப் பெற்றோர்களாகிய நம்மிடம் சொல்லும்போது அதைக் கிண்டலாகவோ அல்லது சாதாரணமான விசயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதற்குப் பதிலாக நம்பிள்ளைகளுக்கு நல்ல நண்பராக இருந்து வழி நடத்தவேண்டும்.

பிள்ளைகளைக் கண்காணிக்கின்றோம் என்பதற்காக சந்தேகத்துடன் பேசுவதும், ஏசுவதுமாக இருக்கக்கூடாது. பொறுமையாக நடந்துகொள்வது நல்லது. அப்போது தான் பிள்ளைகள் மனம் விட்டு நம்மிடம் பேசுவார்கள். அவர்கள் தவறு செய்வது தெரியும் பட்சத்தில் அந்த தவற்றால் உண்டாகும் பிரச்சனைகள், சிக்கல்கள் போன்றவற்றைப் பொறுமையாக எடுத்துச் சொல்ல வேண்டும். இது நம் பிள்ளைகளை நல்வழிப்படுத்த ஏதுவாக இருக்கும்.
பருவ வயதில் சிற்றின்பத்திற்காக வாழ்க்கையைச் சீரழித்து விட வேண்டாம் என்று எடுத்துக்கூறி, பிள்ளைகளின் பதின் பருவத்தைச் சீர்படுத்திவிட்டாலே அவர்களின் எதிர்காலம் நல்ல சிறப்பானதாக இருக்கும்.

எமது பேஸ்புக் பக்கம்

பேசுவது மட்டும் திறமையில்லை..!

தூங்காதே தம்பி தூங்காதே..

இதுவெல்லாம் ஒரு பிரச்சனையா?

எளிமையான முன்னேற்றம் ஏமாற்றத்தை தரும்.

எதிர்பார்ப்பு இல்லாமல் நம் கடமையைச் செய்வோம்.

கடவுள் வந்து வரமெல்லாம் தரமாட்டார்.

Stumbling parents by misguided students!




%d bloggers like this: