கஞ்சா விற்ற இளைஞர்

பிளஸ்-2 மாணவியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது

414

பிளஸ்-2 மாணவியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது. Student kidnapper arrested under Pokcho Act

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூர் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் காரில் வந்து கத்தியை காட்டி மிரட்டி கடத்திச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவியின் தந்தை அரும்பாவூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாணவியை கடத்தியதாக பெரம்பலூர் அருகே ரெங்கநாதபுரத்தை சேர்ந்த சோலைமுத்து மகன் மணிகண்டன் (வயது 22) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மீட்கப்பட்ட அந்த மாணவி பெரம்பலூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

keywords: Student kidnapper arrested, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
%d bloggers like this: