பாலக்கீரையின் மருத்துவ குணங்கள் !! Spinach health benefits in Tamil
கீரை வகைகளில் சத்துகள் அதிகமாக இருப்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு வகையான பலன்கள் இருக்கிறது. அந்த வகையில் இந்த பதிவில் பாலக்கீரையைப் பற்றி விரிவாக பார்க்க இருக்கிறோம்.
இதன் அறிவியல் பெயர் ஸ்பைன்னாசா ஓலேராசா (Spinacea oleracea) ஆகும். பாலக்கீரை ஒரு ஊட்டச்சத்து நிறைந்த பச்சைக்கறி ஆகும். இது நம் உடலுக்கு ஆரோக்கியமான மருத்துவ பலன்களை தருகிறது. இந்த பாலக் கீரையை நாம் சாப்பிடுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் சில முக்கிய பலன்களை ஒவ்வொன்றாக பார்ப்போமா?
பொதுவாக இந்த கீரை புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. புற்றுநோயிலிருந்து உங்களைத் தடுக்கிறது. மேலும் எலும்பின் ஆரோக்கியத்திற்கு நல்லது. என்று மேலோட்டமாக சொல்லிவிடலாம். ஆனால் இது மட்டுமல்லாது இன்னும் பல ஆரோக்கிய பலன்களை கொண்ட இந்த பாலக் கீரையைப் பற்றி நான் தெரிந்த வற்றை தெளிவாக சொல்ல ஆசைப்படுகிறேன்.
அருகம்புல் பொடியின் மருத்துவ பயன்கள்..!
‘மாம்பழம்’ உண்பதால் உண்டாகும் மருத்துவ பயன்கள்..!
உலர் திராட்சை பயன்கள் || Dry grapes
இதிலுள்ள ஊட்டச்சத்துகள்:
இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் அதிகமாக காணப்படுகிறது. அதாவது வைட்டமின்கள் ஏ, சி, கே1, பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் (ஃபோலேட் உட்பட) மற்றும் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் குறைந்த கலோரிகள் தான் நமது தோல், முடி மற்றும் எலும்புகளுக்கும் நல்ல பலனை தருகிறது.
இதய ஆரோக்கியம்:
கீரையில் உள்ள நைட்ரேட்டுகள் இரத்த நாளங்களை தளர்த்துவதன் மூலமும், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலமும் நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
எலும்பு மற்றும் பல் ஆரோக்கியம்:
பாலக் கீரையில் வைட்டமின் கே1 அதிகளவு இருக்கிறது. அதோடு மெக்னீசியம், காப்பரும் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக இருக்க உதவுகிறது.
பாரம்பரிய அரிசிகளை Amazon - ல் வாங்க கீழுள்ள லிங்க் கிளிக் செய்யவும் |
மலச்சிக்கல் போக்கும்:
பாலக்கீரையிலுள்ள நார்ச்சத்தானது நம் உணவின் செரிமானத்திற்கு சிறப்பாக உதவி புரிகிறது. இதனால் வயிற்று உபாதைகள் வராமலும், மலச்சிக்கலையும் தடுக்க உதவுகிறது.
உடல் எடை பராமரிக்க:
பாலக்கில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், நம் உடல் எடை அதிகரிக்காமலும் அதே நேரத்தில் குறையாமலும் பாதுகாக்க உதவுகிறது.
புற்றுநோய் வராமல் தடுக்கிறது:
இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் மார்பக புற்றுநோய் உட்பட சில புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கின்றன.
கண் ஆரோக்கியம்:
லுடீன் (Lutein) மற்றும் ஜியாக்சாண்டின் (zeaxanthin) இந்த கீரையில் ஏராளமாக இருக்கிறது. இது கண் ஆரோக்கியத்திற்கு உகந்தது. மேலும் வயது முதுமையால் வரும் பிரச்சனையான கண்புரை அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பாலக்கீரையில் வைட்டமின் A அதிக அளவில் உள்ளதால் மாலைக்கண் வராமல் பாதுகாக்கிறது. கண்களில் ஏற்படும் அரிப்பு போன்றவை வராமல் தடுக்க உதவுகிறது.
நீரிழிவு நோயளிகளுக்கு தீர்வு:
இது நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாக உள்ளது. இந்தக்கீரையில் ஆல்பா-லிபோயிக் அமிலம் இருக்கிறது. இது குளுக்கோஸின் அளவைக் கட்டுக்குள் வைப்பதாகவும், இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மூளை ஆரோக்கியம்:
இந்தக் கீரையில் உள்ள அதிக அளவு ஃபோலேட் அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்க செய்கிறது. அதே போல் வயோதிகர்களுக்கு உண்டாகும் நினைவாற்றல் பிரச்சனையை குறைக்க உதவுகிறது.
சரும ஆரோக்கியத்திற்கு உகந்தது:
இதிலுள்ள வைட்டமின்களால் நமது சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் சருமம் பளபள்பான தோற்றத்தை தருகிறது.
கர்பிணி பெண்களுக்கு:
இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், கால்சியம் போன்றவை சத்துகள் இதில் இருக்கின்றது. பாலக்கீரையில் போலிக் அமிலமும் அதிகளவில் இருக்கிறது. கர்பிணிகள் இந்த பாலக்கீரையை சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ரத்தத்தை சுத்தம் செய்கிறது:
இந்தக்கீரையானது நமது உடலில் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது.
- பாலக்கீரையின் சாற்றை வடிகட்டி 3 துளி காதில் விட்டால் காதில் இரைச்சல் இருப்பதைக் குணப்படுத்தும்.
- பாலக்கீரைச் சாறுடன், சீரகம் 5 கிராம், இரண்டு பல் பூண்டு ஆகியவற்றை அரைத்து மூன்று சம பாகமாகப் பிரித்து வடிகட்டி மூன்று வேளை சாப்பிட்டால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.
Key words: Spinach benefits, benefits of Spinach