மசாலா மீன் ப்ரை செய்வோமா?
Spicy Fish Fry in Tamil
மீன் வறுவல் சுவையான சைட் டிஸ்தான் அந்த சைட் டிஸ்ஸை இன்னும் சுவையாக சமைத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். என்ன நாக்கில் எச்சில் ஊறுகின்றதா. வாங்க மசால தடவி மீன் வறுவல் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மீன் ஒரு சத்தான அசைவ உணவு. அசைவ பிரியர்களில் ஒரு சிலர் மீன் சாப்பிடுவதை தவிர்த்து விடுகின்றனர். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மீனின் வாடையும் ஒரு காரணமாக இருக்கின்றது. ஒரு சிலருக்கு மீனிலுள்ள முள்ளை எடுத்துவிட்டு சாப்பிடுவதற்கு மலைப்பு அதனாலும் மீனை சாப்பிட மாட்டார்கள். ஆனால் நாம் இப்போது செய்ய இருக்கும் இந்த மசாலா மீன் வறுவல் எல்லோருக்கும் பிடிக்கும்படி சுவையாகவும் அதே நேரத்தில் கவுச்சை வாடை இல்லாமலும் இருக்கும்.
இதையும் படிக்கலாம்:
மசாலா மீன் வறுவலுக்கு தேவையான பொருட்கள்: Ingredients for Spicy Fish Fry
சுத்தம் செய்து நறுக்கிய மீன் துண்டுகள்,
பொரிப்பதற்கு எண்ணெய்,
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் – 8,
கருவேப்பிலை – கொஞ்சம்,
மல்லிதழை – கொஞ்சம்,
எலுமிச்சம்பழசாறு – 2 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி,
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி,
மல்லித்தூள் – 2 தேக்கரண்டி,
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி,
மைதா – 4 தேக்கரண்டி,
உப்பு – தேவைக்கு ஏற்ப
செய்முறை:
வெங்காயம், கருவேப்பிலை, மல்லிதழை ஆகியவற்றை அரைத்து பேஸ்ட் போல் எடுத்துக்கொள்ளவும். எலுமிச்சைசாறுடன் மேலுள்ள மசாலா பொருட்களுடன் உப்பு மற்றும் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து நல்ல திக்கான மசாலா செய்து கொள்ளவும். சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள மீன் துண்டுகளின் மீது திக்கான மசாலாவை நன்றாக தடவி விடவும். அதன் பிறகு மசாலா தடவிய மீன் துண்டுகளின் மீது மைதா மாவை தூவி ஊற வைத்து விடவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு அதை எடுத்து பொரித்து எடுத்தால் சுவையான மசாலா மீன் ப்ரை ரெடி.
மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் கலந்த கலவையை கொண்டு மீன் பொறிக்காமல் மேலே சொன்ன முறையில் செய்து பாருங்கள். உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
மசாலா மீன் ப்ரை செய்வோமா? | |
காளான் பிரியாணி செய்யலாம் வாங்க…! | |
சுவையான நண்டு கிரேவி செய்யலாம் வாங்க | |
அருமையான ஸ்வீட்டை அரிசி மாவிலேயே செய்யலாம். | |
காரம் சாரமான சுவையோடு கமகமவென்று நண்டு சூப் எப்படி செய்யலாம்? | |
வீட்டில் எறும்புத் தொல்லையா? உங்களுக்காக சில டிப்ஸ்! | |
சுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க! | |
வெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க! | |
பீட்சாவில் தோசை | |
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்து சாப்பிட விருப்பமா? |
Keywords: Spicy Fish Fry in Tamil
You must log in to post a comment.