Speed limit reduction on Dubai-Sharjah road.

துபாய்-சார்ஜா முக்கிய சாலையின் வேக வரம்பு குறைக்கப்பட்டது.

120

துபாய்-சார்ஜா முக்கிய சாலையின் வேக வரம்பு குறைக்கப்பட்டது.

Speed limit reduction on Dubai-Sharjah road.

துபாயில் உள்ள அல் இத்திஹாத் சாலையின் வேக வரம்பு குறைக்கப்பட்டுள்ளதாக கலீஜ்டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நவம்பர் 20 முதல் ஷார்ஜா மற்றும் அல் கர்ஹுத் பாலத்திற்கு இடையே உள்ள வாகன வேக வரம்பை ஆர்டிஎ குறைத்துள்ளது. அதாவது மணிக்கு 100 கிமீ வேகத்தில் இருந்து 80 கிமீ ஆக குறைக்கப்படவுள்ளது.

துபாயில் இருந்து ஷார்ஜாவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் ஹம்தான் ஃபிராஸ், ஷார்ஜாவின் அல் நஹ்தாவில் தங்கியிருப்பவர்கள் துபாய் இன்டர்நெட் சிட்டிக்கு செல்லும் வழியில், அபு ஹைலுக்குப் பிறகு டன்னல் வரை நெரிசலாக இருக்கிறது. அதற்குப்பிறகு சீராக செல்ல முடிகிறது. அண்டர்பாஸைக் கடந்தவுடன் பல வாகனங்கள் மணிக்கு 100 கிமீ வேகத்தையும்  தாண்டிச் செல்கின்றன.

நெரிசலில் மிக மெதுவாக இயக்கிய வாகன ஓட்டிகள் சாலை காலியாக இருப்பதால் வேகமாக ஒட்ட ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் விபத்திற்கான சூழல் அதிகமாகிறது. இதன் காரணமாகவே இந்த வேக வரம்பு குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்படி பணத்தை சேமிச்சு பாருங்களேன்..!

வெள்ளை சோளம் ஆரோக்கியமானதா?

இந்த புதிய வேக வரம்பு அல் இத்திஹாத் சாலையின் ஷார்ஜா-துபாய் எல்லையில் இருந்து அல் கர்ஹூத் பாலம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய அதிகபட்ச வேக வரம்பை பிரதிபலிக்கும் வகையில் அல் இத்திஹாத் சாலையில் உள்ள போக்குவரத்து அறிவிப்பு பலகைகள் புதுப்பிக்கப்படும்.  புதிய வேக விதியின் அடிப்படையில் சாலையில் உள்ள ரேடார்கள் சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் உள் செல்தல் மற்றும் வெளியேறும் எண்ணிக்கைகள் மற்றும் போக்குவரத்து விபத்துக்களை மதிப்பாய்வு செய்து துபாய் காவல்துறையுடன் இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த தகவலை சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இன்று 14/11/2023 (செவ்வாய்கிழமை) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சாலையில் வாகன ஓட்டிகள் 100கிமீ வெகத்தில் செல்லாமல் 80கிமீ வேகத்தில் சென்று அபராதத்திலிருந்தும் ஆபத்திலிருந்தும் பாதுகாத்து கொள்வது நல்லது.

Our Facebook Page

Traditional Kitchen

Keywords: Speed limit reduction, Dubai News, Sharjah news, dubai tamil news, uae tamil news




Leave a Reply

%d
Verified by MonsterInsights