பங்குனி உத்திரம் முன்னிட்டு அரியலூர் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு. Special worship at Ariyalur district temples
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அரியலூா் ஆலந்துறையாா் கோயில் சன்னதியில் உள்ள முருகனுக்கும், பெரம்பலூா் சாலையில் உள்ள பாலசுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலிலும், கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறைதீா்க்கும் குமரன் கோயிலிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. செந்துறை நெய்வனத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த செல்வசுப்ரணியா் திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சியும், சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.
முன்னதாக வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானுக்கு பால்,தயிா், தேன், பழம், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டன. பின்னா் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் பக்தா்களுக்கு காட்சி தந்தாா்.
இதேபோல் திருமழபாடி, கீழப்பழுவூா், பொன்பரப்பி, ஆண்டிமடம், ஜயங்கொண்டம், மீன்சுருட்டி, தா. பழூா் உள்ளிட்ட பகுதி சிவன் கோயில் சன்னதியில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
keywords: Special worship, ariyalur, ariyalur news, ariyalur news today, ariyalur today news, அரியலூர், அரியலூர் மாவட்டம்.
You must log in to post a comment.