Special prayers

40 நாள் தவக்காலம் தொடங்கியது, கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.

284

40 நாள் தவக்காலம் தொடங்கியது, கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை. 

Special prayers in churches.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறப்பதற்கு முன்னதாக அவர் பாடுபட்ட நாட்களை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர்.
இயேசு, சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், அவர் உயிர்த்தெழுந்த 3-ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடுகின்றனர்.

இந்த தவக்காலத்தின் முதல் நாளான நேற்று சாம்பல் புதனாக கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனையும் நடைபெற்றன. முன்னதாக கடந்த ஆண்டு பயன்படுத்திய குறுத்தோலைகள் சேகரிக்கப்பட்டு அவற்றை எரித்த சாம்பலால் பாதிரியார்களால் கிறிஸ்தவர்களின் நெற்றியில் சிலுவை அடையாள குறியிடப்பட்டது.

ஈஸ்டர்

தற்போது கொரோனா கால கட்டமாக இருப்பதால் சாம்பல் பக்தர்களின் கையிலும் வழங்கப்பட்டது. இந்த தவக்காலத்தின் போது கிறிஸ்தவர்கள் அசைவ உணவுகளை உண்ணாமல் உபவாசம் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தவக்காலத்தையொட்டி தினமும் ஆலயங்களில் சிறப்பு ஜெபம், மறையுரை, திருப்பலி போன்றவை நடக்கின்றன. ஏப்ரல் 2-ந்தேதி புனித வெள்ளி ஆகும். 4-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம், Special prayers in churches




%d bloggers like this: