புதிய செய்தி :

இன்று முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு சிறப்பு உடனடித் தேர்வு.

இன்று முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு சிறப்பு உடனடித் தேர்வு


பிளஸ் 1 மாணவர்களுக்கான சிறப்பு உடனடித் தேர்வு வியாழக்கிழமை (ஜூலை 5) முதல் நடைபெறுகிறது.

இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராத மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு உடனடித் தேர்வுகள் ஜூன், ஜூலையில் நடத்தப்படுகிறது.

பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு உடனடித் தேர்வுகள் பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள பனிமலர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கி வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. (மேலும் வாசிக்க தினமணி…)
Leave a Reply