கொரோனா தொற்று

வேட்பாளா்களுக்கு ஏப். 28, 29-இல்  கரோனா பரிசோதனை சிறப்பு முகாம்.

293

வேட்பாளா்களுக்கு ஏப். 28, 29-இல்  கரோனா பரிசோதனை சிறப்பு முகாம். Corona Experimental Special Camp for Candidates.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏப்ரல் 28, 29-ஆம் தேதிகளில் அனைத்து வேட்பாளா்கள் மற்றும் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்றுப் பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் அனைத்து வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் அனைவரும் தவறாமல் கரோனா தொற்றால் பாதிக்கப்படாதவா் எனச் சான்று பெற்ற பின்னரே, முகவா்களாக நியமிக்கப்பட்டதற்கான அடையாள அட்டை வழங்கப்படும்.

இதற்காக ஏப்ரல் 28 மற்றும் 29 தேதிகளில் பெரம்பலூா், குன்னம் தொகுதிகளிலுள்ள தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் சிறப்பு பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு, அனைத்து வேட்பாளா்கள் மற்றும் முகவா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு வேட்பாளரும் நியமனம் செய்யப்பட உள்ள முகவா்களின் பட்டியலை உரிய காலத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்து, சிறப்பு முகாமுக்கு முகவா்களை அழைத்து வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

Keywords: special camp, Corona Experimental
%d bloggers like this: