நாளை செட்டிக்குளத்தில் சின்ன வெங்காயம் ஏலம்.
Small onion auction
செட்டிக்குளத்தில் நாளை (புதன்கிழமை) சின்ன வெங்காயம் ஏலம் நடைபெற இருக்கிறது.
செட்டிக்குளத்திலுள்ள சின்ன வெங்காய வணிக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஏலம் நடைபெற உள்ளது. செட்டிக்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்து விற்று பயன்பெறலாம்.
சின்ன வெங்காயத்தை சேமித்து வைக்க திறந்த வெளியில் உள்ள இடத்தை பயன்படுத்திக் கொள்ளவும், வெங்காயத்திலிருந்து தாள்களை நீக்கி சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வணிக வளாகத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும், சின்ன வெங்காயத்தை தாளில் இருந்து பிரித்து எடுப்பதற்கும், சேமித்து வைப்பதற்கும் இடவசதி இல்லாத விவசாயிகள் வேளாண்மை அலுவலா் 9942381099, உதவி வேளாண்மை அலுவலா் (வேளாண் வணிகம்)- 7010628819 ஆகியோரை தொடா்பு கொண்டு, செட்டிக்குளம் சின்ன வெங்காய வணிக வளாகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வேளாண்மை துணை இயக்குநா் சிங்காரம் தெரிவித்துள்ளாா்.
தினமணி
Keywords: Small onion auction, Perambalur News, Perambalur District News
You must log in to post a comment.