small grains health benefits

சிறுதானியம் பற்றி தெரிந்து கொள்வோமா? Small Grains

369

சிறுதானியம் பற்றி தெரிந்து கொள்வோமா?

let’s know about ‘small grains’ health’

தானியங்களில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றில் சிறுதானியங்கள் என்றால் என்ன ?அவற்றின் பயன்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறுதானியம் என்றால் என்ன?

சிறிய அளவில் விதைகளைக் கொண்ட தானியங்களை சிறுதானியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை தானியங்கள் குறைவான தண்ணீரிலும் வளரக்கூடியது. கூடுதலாக சொல்ல வேண்டுமெனில் வறண்ட மற்றும் மண்வளம் குறைந்த நிலப்பகுதிகளிலும் வளரக்கூடியவை.

மேலும் இது ஒரு குறுகிய காலப் பயிராகும். விதை விதைத்தலிருந்து, 65 நாட்களிலேயே அறுவடைக்குத் தயாராகி நிற்கும்.அதே போல் சிறுதானியங்களை முறையாக சேமித்து வைக்க வேண்டும். அப்படி சேமித்து வைக்கும் பட்சத்தில்  இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அல்லது அதற்கு அதிகமான வருடங்களும் கூட கெட்டுப் போகாமல் இருக்கும்.

இந்த சிறுதானியங்களை நமது முன்னோர்கள் பண்டைய காலத்திலிருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது சிறுதானியம் என்றால் என்ன? என்று தேடும் அளவிற்கு வந்துவிட்டோம். அதற்கு காரணமும் உண்டு.

என்ன காரணம்?

பசுமைப் புரட்சி தொடங்கப்பட்டதும், வெள்ளை அரிசி மற்றும் கோதுமைகளின் உற்பத்தியே நம்மை ஆக்கிரமித்து விட்டது. இதனால் சிறுதானியங்களின் உற்பத்தி குறைக்கப்பட்டு பிறகு ஓரங்கட்டப்பட்டுவிட்டது என்றால் அதை மிகையாகாது.

சிறுதானியங்களின் வகைகள் என்னென்ன? What are the types of small grains?

இதில் அப்படி என்னதான் இருக்கிறது: What does Sirudaniyam have in it?

சிறுதானியம் என்றால் என்ன அதன் வகைகளை பார்த்தோம். தற்போது அதிலுள்ள சத்துகள் என்ன? அந்த சத்துக்களால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை கொஞ்சம் விபரமாக பார்ப்போம்.

வெள்ளை அரிசி போன்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது சிறுதானியங்களில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்களும் அடங்கியுள்ளன. ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிரம்பியவை. குளுட்டன், அமிலத்தன்மை இல்லாதது. வெறும் கலோரிகளை மட்டும் கொடுக்கும் சர்க்கரை சத்து நிறைந்தது.

சிறுதானிய வகைகளும் அவற்றின் பிற மொழிப் பெயர்களை தெரிந்து கொள்ள

நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய பயன்கள் என்னென்ன? What are the health benefits for us?

இதில் ஒவ்வொரு தானியமும் ஒவ்வொரு வகையில் சிறப்பானதாக இருக்கின்றது. இதில் ஒட்டு மொத்தமாக சிறுதானியங்களால் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்ன என்பதை பற்றி  பார்ப்போம்.
  • உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. இதிலுள்ள அமினோ அமிலமான டரைப்டொபென் என்னும் வேதிபொருளால் உணவு செரிமானமாவதையும், பசியையும் தாமதமாக்கி உடல் எடை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
  • நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
  • ஆழ்ந்த தூக்கத்திற்கு நல்ல மருந்தாக இருக்கிறது.
  • பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைக்கிறது.
  •  சருமத்தை இளமையாக வைத்து மிருதுவான தோற்றத்துடன் இருக்க உதவி புரிகின்றது.
  • இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் இணைந்து கோலோன் கேன்சர் உருவாகும் அபாயத்தை குறைக்கிறது.
  • சிறுதானியத்திலுள்ள மெக்னீசியம் தமனிகளிலுள்ள உள்சுவற்றிளை தளர்த்தி உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைக்கின்றது. அதோடு மட்டுமல்லாமல் ஆஸ்த்துமா மற்றும் ஒற்றை தலைவலிகள் ஏற்படுவதை தடுக்கின்றது.

இது போன்ற அதிகம் அதிகம் பலன்கள் இருக்கின்றது. ஒரு சிலவற்றை மட்டுமே இதில் குறிப்பிட்டுள்ளேன். மேலும் சிறுதானியங்களின் ஒவ்வொரு வகைக்கும் அதன் பலன்களை தனி பதிவாகவே  நமது இணையதளத்தில் உள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளவும்.

எது எப்படியோ எளிதாக கிடைத்த சிறுதானியங்கள் இப்போது அறிதாக கிடைக்கும் பொருளாக பார்க்க ஆரம்பித்து அதன் பலன்களை தெரிய ஆரம்பித்துள்ளோம். சிறுதானியங்களை அதிகமாக பயன்படுத்தி ஆரோக்கியத்திற்கு அழைப்பு விடுப்போமா!

இ-புத்தகங்களை ஆன்லைனில் வாங்க

Our facebook page

Keywords: Sirudaniyam Payngal, Small Grain, Small grain benefits in tamil, Millet




Leave a Reply

%d bloggers like this:
Verified by MonsterInsights