சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க என்ன செய்யலாம் || Skin care tips in Tamil.
உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், அவர்கள் தங்களின் சருமத்தில் உள்ள எண்ணெயை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
சருமத்திற்கு எப்போதும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தும் போது, சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும்.
சிலருக்கு சருமத்தில் எப்பொழுதும் எண்ணெய் வழிந்துகொண்டே இருக்கும் அப்படிப்பட்டவர்கள் இந்த ஃபேஸ் பேக்கினை அப்ளை செய்யுங்கள் சரியாகிவிடும்.
முகத்தில் எண்ணெய் வடிய காரணங்கள் என்ன?
- உங்கள் குடும்பத்தில் யாருக்காவது எண்ணெய் வடியும் முகம் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கும் அவ்வாறே இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில், இது மரபுவழியாக வர வாய்ப்புண்டு.
- பருவ வயதினர் மற்றும் இளைஞர்களை காட்டிலும் வயதானவர்களுக்கு இப்பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் குறைவு தான். வயது கூடும் போது சருமத்தில் எண்ணெய் தன்மை குறையும்.
- பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் சருமத்தை பெருமளவு பாதிக்கிறது. வெப்பமான, ஈரப்பதம் உள்ள பகுதிகளில் வசிப்போருக்கு முகத்தில் எண்ணெய் அதிகமாக சுரக்கும். அதனால் தான் குளிர்காலத்தை காட்டிலும் கோடையில் எண்ணெய் அதிகமாக சுரக்கிறது.
- முகத்தை அதிகமாக கழுவினாலும் எண்ணெய் வடியும்.
- ஆண்ட்ரோஜன் எனும் ஹார்மோன் தான் சருமத்தில் எண்ணெய் சுரக்கச் செய்கிறது. பருவ வயதிலும் பிரசவ காலத்திலும் இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும்.
- மன இறுக்கம், உடல் நலக்குறைவு காரணமாகக் கூட முகத்தில் எண்ணெய் அதிகமாக சுரக்கும்.
- சருமத் துளைகள் பெரிதானால் எண்ணெய் அதிகமாக சுரக்கும். வயது கூடும்போது இப்படி ஆக வாய்ப்புண்டு.
- சருமத்தில் ஈரப்பதம் குறைந்தால், சருமம் வறண்டு விடும். இதனால் எண்ணெய் அதிகம் சுரக்கும்.
முகத்தில் எண்ணெய் பசை நீங்க (Skin care tips in Tamil)
அதாவது ஒரு சுத்தமான பவுலில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு ஸ்பூன் சந்தனம் மற்றும் தேவையான அளவு காய்ச்சாத பசும் பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து பின் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்துவர. சருமத்தில் வடியும் எண்ணெய் பசை நீங்கி சருமம் பட்டுப்போல் பளபளக்கும்.
ஸ்கின் பிரச்சனை உள்ளவர்கள் இதை முயற்சி செய்ய வேண்டாம்.
You must log in to post a comment.