Siege to remove occupation

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை.

319

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை. Siege to remove occupation

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவையூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சூர்யபிரகாஷ் தலைமையில் மங்களமேடு கிராம பொதுமக்களில் சிலர் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர்கள் கூறுகையில் எங்கள் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை பொதுமக்கள் விளையாட்டு மைதானமாகவும், விவசாயிகள் உழவர் சந்தையாகவும், தானியம் களமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த இடத்தின் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக தற்போது தனிநபர்கள் 6 பேர் ஆக்கிரமிப்பு செய்து கல் சிலை வைத்தும், வில்லியம், சூலம் ஆகியவற்றை நட்டு வைத்தும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக கலெக்டர் விசாரித்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் தேர்தலை புறக்கணிப்போம் என்றனர். பின்னர் அவர்களில் சிலர் மட்டும் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து மனு அளித்தனர்.

தினத்தந்தி

keywords: Siege to remove occupation, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




%d bloggers like this: