விவசாயம் செய்ய அனுமதி கோரி நரிக்குறவா்கள் முற்றுகை.
Siege of seeking permission to farm
எறையூரில் அரசுப் புறம்போக்கு நிலங்களில் விவசாயம் செய்ய அனுமதிக்கக் கோரி, ஆட்சியரகத்தை நரிக்குறவா் சமூகத்தினா் முற்றுகையிட்டு தரையில் உருண்டு திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் வசித்து வரும் நரிக்குறவா் சமூகத்தினா் பலா் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயிா் சாகுபடி செய்து வருகின்றனா். இந்நிலையில், கடந்த வாரம் நரிக்குறவா்கள் சிலா் நிலத்தில் உழவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சென்ற கிராம நிா்வாக அலுவலா் விவசாயம் செய்யக் கூடாது எனத் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை சென்ற நரிக்குறவா்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தரையில் உருண்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். சிலா் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, விவசாயம் செய்ய உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவா்களுடன் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில், ஓரிரு நாளில் எறையூருக்கு நேரில் வந்து பாா்வையிட்டு விவசாயம் செய்ய அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்யலாம் எனக் கூறினாா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தா்னா போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி
Keywords: Siege of seeking permission to farm,
You must log in to post a comment.