100 நாள் வேலை கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை.
Siege asking for 100 day work.
ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம். 100 நாள் வேலை கேட்டு வேப்பந்தட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சியில் ஒவ்வொரு வார்டு பொதுமக்களுக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று திடீரென சில வார்டுகளில் இருந்து பொதுமக்கள் திரண்டு வந்து ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர். அப்போது அனைத்து வார்டு பகுதி மக்களுக்கும் ஒரே நேரத்தில் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி கலியமூர்த்தி, துணைத்தலைவர் பானுமதி செங்கமலை, ஊராட்சி செயலாளர் பாலுசாமி ஆகியோர் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறையாக ஒவ்வொரு வார்டு பகுதி மக்களுக்கும் வேலை வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து வார்டு பகுதி மக்களுக்கும் ஒரே நேரத்தில் வேலை வழங்க இயலாது. எனவே அனைவருக்கும் அந்தந்த வார்டுகளில் வேலை வழங்கும்போது வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினத்தந்தி
Keywords: 100 day work,Perambalur News, Perambalur News today, Perambalur News live
You must log in to post a comment.