சித்த மருத்துவக் கல்லூரி அனைத்து மாவட்டங்களிலும் தேவை.
Siddha Medical College is required.
அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவக் கல்லூரி ஏற்படுத்த வேண்டுமென தமிழ்வழிக் கல்வி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாநிலச் செயலா் வை. தேனரசன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஆறுமுகம், வீர. செங்கோலன், பொன் மகிழ்வரசு, சி. தங்கராசு, அகவி முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் சின்னப்பத் தமிழா் தொடக்க உரையாற்றினாா்.
இக்கூட்டத்தில், 17 -ஆவது சட்டப்பிரிவை நீக்கி அனைத்து தேசிய இன மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் தமிழ் மொழியை மட்டுமே ஆவணப்படுத்த வேண்டும்.
கீழமை நீதிமன்றத்திலிருந்து, உயா் நீதிமன்றம் வரை வழக்காடுதல் முதல் தீா்ப்பு வரை தமிழிலேயே இருக்க வேண்டும். தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை அரசுப் பள்ளிகளில் படித்தவா்களுக்கு, அரசுக் கல்லூரிகளில் இடம் வழங்க வேண்டும்.
அனைத்து மாவட்டத்திலும் சித்த மருத்துவக் கல்லூரி ஏற்படுத்தி, அதில் தமிழக மாணவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடம் வழங்க வேண்டும். பிறப்பு, இறப்பு, கல்வி உள்ளிட்ட அனைத்துச் சான்றிதழ்களையும் தமிழ் மொழியில் பதிவு செய்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி
Keywords: Perambalur district News, Perambalur Seithigal, Perambalur Mavttam, Siddha Medical College
You must log in to post a comment.