Mashroom Briyani

காளான் பிரியாணி செய்யலாம் வாங்க…! Mushroom biryani

93

காளான் பிரியாணி செய்யலாம் வாங்க…! Mushroom biryani

பிரியாணி என்றாலே மட்டன்தான் என்ற காலம் மாறி இப்போது சிக்கன் பிரியாணி, இறால் பிரியாணி, மீன் பிரியாணி, பீப் பிரியாணியென்று, முட்டை அசைவமா இருந்தது போய் குஸ்காவா இருந்தது பிறகு வெஜிடபுள் பிரியாணியா மாறிவிட்டது. அதிலும் காய்களில் குறிப்பிட்ட காய்களில் பிரியாணி செய்ய ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது காளான் பிரியாணி.

காளானை ஆங்கிலத்தில் மஷ்ரூம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் நாம் இனி இதை மஷ்ரூம் பிரியாணி என்ற சொல்லாடலில் எழுதுகிறேன்.

மஷ்ரூம் பிரியாணி செய்வதற்குத் தேவையான பொருட்கள்: Mushroom biryani

மஷ்ரூம்கள் -1 கப்,
வெங்காயம் பெரியதாக -2,
தக்காளி -1,
குடை மிளகாய் -1,
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 மேசைக்கரண்டி,
பச்சை மிளகாய் -3 அல்லது 4,
புதினா ஒரு கொத்து, மல்லி இலை – கைப்பிடியளவு,
எலுமிச்சை- 1/2,
பட்டை 1 அங்குலம்,
கிராம்பு – 5,
ஏலக்காய் -2,
பிரியாணி இலை -2
மிளகாய்த் தூள் 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் -2 மேசைக்கரண்டி,
2 கப் பாஸ்மதி அரிசி,
தண்ணீர் 4 கப்,
இவற்றில் தக்காளி, வெங்காயம் , குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவேண்டும்.

மஷ்ரூம் பிரியாணி செய்முறை: Mushroom biryani

பாஸ்மதி அரிசி நன்றாகக் கழுவி 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் பதிலாக வீட்டு நெய் சேர்த்தாலும் நல்ல வாசனையாக இருக்கும். எண்ணெய்யோ நெய்யோ சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைப் போடவேண்டும். கிராம்பு வெடிக்கத் தொடங்கும்போது, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் பச்சை மிளகாய் போடவும். மிளகாய் வெங்காயத்துடன் கிளரிவிட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவேண்டும். அடுப்பினை சிம்மில் வைத்துச் செய்வது சிறந்தது. இல்லையென்றால் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டவுடன் அடிப்பிடிக்க ஆரம்பித்துவிடும்.

பச்சை வாடை போன வெட்டி வைத்திருந்த தக்காளியுடன் குடை மிளகாய் மற்றும் மஷ்ரூம் சேர்த்துக்கொள்ள வேண்டும். நன்றாக கிளரிவிட்டு புதினாவைச் சேர்க்கவும். காய்கறிகள் லேசாக கலர் மாறும்போது மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி சேர்க்கவும். (ஒரு சிலர் மஞ்சள் மற்றும் மிளகாய்ப் பொடிகளை வெங்காயம் வதங்கிய உடனும் சேர்ப்பார்கள்.) ஊறவைத்த பாஸ்மதி அரிசியை இதில் சேர்த்து நன்க கிளறிவிட்டு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். உப்பை வெங்காயம், தக்காளி என்று சேர்க்கும் போதே கொஞ்சம் சேர்த்துக் கொள்ளவேண்டும். சிலர் கடைசியாக உப்பைப் போடுவார்கள். அப்படிப் போடுவதால் காய்களில் நன்றாக உப்பு பிடிக்காது. கடைசியில் உப்பு சுவை பார்த்துச் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

அரிசி வெந்து புழுங்கி வரும் போது மேலே கொஞ்சம் மல்லி இலை மற்றும் புதினா தூவிவிட்டு பாத்திரத்தை நன்றாக மூடிவைத்து சிறிது நேரம் தம்மில் போடவும். அதிகமான நேரம் தம்மில் இருக்க வேண்டிய அவசியம் இருக்காது 5 நிமிடம் இருந்தால் போதும். தற்போது மஷ்ரூம் பிரியாணி ரெடி.

எமது பேஸ்புக் பக்கம்

மசாலா மீன் ப்ரை செய்வோமா?

காளான் பிரியாணி செய்யலாம் வாங்க…!

சுவையான நண்டு கிரேவி செய்யலாம் வாங்க

அருமையான ஸ்வீட்டை அரிசி மாவிலேயே செய்யலாம்.

காரம் சாரமான சுவையோடு கமகமவென்று நண்டு சூப் எப்படி செய்யலாம்?

வீட்டில் எறும்புத் தொல்லையா? உங்களுக்காக சில டிப்ஸ்!

சுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க!

வெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க!

பீட்சாவில் தோசை

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்து சாப்பிட விருப்பமா?

Keywords: Mushroom biryani, Kalan Biryani, Biryani, காளான் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி




%d bloggers like this: